விழுமிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முன், பின்வரும் அப்பியாசங்களை உங்கள் குழுவுடன் செய்து அவர்களது முனைப்பான செவிமடுத்தல் திறன்களை விருத்தி செய்யவும். முனைப்பான செவிமடுத்தல் பற்றிய தௌpவான பயிற்சியின் பின் அவர்கள் சகல விழுமிய நடவடிக்கைகளிலும் திறம்பட பங்கேற்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் செவிமடுக்கவும் மற்றவரிலிருந்து கற்றுக்கொள்ளவும் எழுந்து தமது அபிப்பிராயங்களையும் உணர்வுகளையும் கூறுவதற்கேற்ற நம்பிக்கையையும் பெறுவதனால் உள்ளகப்படுத்தப்பட்ட வளமானதொரு பங்குபற்றல் சூழலையும் உருவாக்கிக் கொள்வார்கள்.