திட்ட கண்ணோட்டம்

ஆசிய மன்றத்தின் எமது கதைகள் என்பது கதை சொல்லல் மற்றும் கலையினைப் பயன்படுத்தி இளைஞர்களை முதியவர்களுடன் இணைப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அம்பாறை, களுத்துறை, குருநாகல், மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் (FRC) சேகரிக்கப்பட்ட முதியவர்களின் வாழ்க்கைக் கதைகளை இந்த செயற்றிட்டம் பயன்படுத்துகின்றது. தமது சொந்தக் கதைகளை சொல்வதற்கு முன்னரும், சொல்லும் போதும், சொல்லியதன் பின்னரும் முதியவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உளச்சமூக உதவிகள் வழங்கப்படுவதனை FRCஉடன் பணியாற்றியமை உறுதி செய்தது. இந்த தனித்துவமான அணுகுமுறை, வழிகாட்டுதல்களின் தொகுப்பைப் பின்பற்றுகிறது. இது மக்களை கதைசொல்லல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் உளவியல் ரீதியாக உணர்திறன் முறையில் ஈடுபடுத்த பயன்படுகிறது.

கலை வழிகாட்டுதலுக்காக, ஆசிய மன்றமானது தீர்த்த சர்வதேச கலைஞர்கள் கூட்டுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு தொடர்ச்சியான ஊடாடும் பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம், வாழ்க்கைக் கதைகளை எவ்வாறு கலையாக மாற்றுவது என்பது குறித்து வழிகாட்டுகிறது.

இந்த முன்முயற்சியின் மூலம், முதியவர்கள் தங்கள் நினைவுகளை இளைஞர்களுக்கு அனுப்பக்கூடிய சமூகங்களிடையே ஒரு பகிரப்பட்ட இடத்தை உருவாக்குவதை ஆசிய மன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் நம்பிக்கையுடன், பகிரப்பட்ட மதிப்புகள், பின்னடைவு மற்றும் ஒத்திசைவை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Stronger Together SL