இந்த பிரிவின் நடவடிக்கைகள் பங்குபற்றுனர்களை சமாதானம் பற்றி ஆழமாக விளங்க வைக்கின்றன. பங்குபற்றுனர்கள், ஒவ்வொரு மனிதனும் சமாதானத்தை வேண்டுவதோடு சமாதானமாக வாழும் உரிமையையும் கொண்டுள்ளான் என்பதைக் கண்டு கொள்வார்கள். முனைப்பான செவிமடுத்தல் மற்றும் கட்டமைப்பான மொழியால் முரண்பாடுகள் சமாதானமாக தீர்க்கப்படலாம் என்பதை இங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காட்டும்.

பிரதிபலிப்பு குறிப்புக்கள்

  • ‘சமாதானம் ஒரு புன்சிரிப்புடன் ஆரம்பமாகிறது.’ – அன்னை தெரேசா
  • ‘கண்ணுக்குக் கண் என்பதால் முழு உலகத்தையும் குருடராக்;கத்தான் முடியும்.’ – மகாத்மா காந்தி
  • ‘திறந்த மனமே ஒருவருக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய சொத்தாகும். மிகப் பெரிய ஆயுதமாக இருப்பதானால் நீங்கள் சமாதானத்தின் கருவியாக இருங்கள்.’ – கார்லோஸ் சன்டானா
  • ‘மற்றையவர்களுடன் யுத்தம் செய்பவர்கள் தமக்குள்ளேயே சமாதானமாக இருப்பவர்களல்லர்.’ – வில்லியம் ஹேஷ்லிட்
  • ‘சமாதானம் என்பது யுத்தமின்றி இருப்பதல்ல. அது நீதியுடன் பயமின்றி இருப்பதாகும்.’ – உர்சுலா பிராங்க்ளின்
  • ‘உண்மையைத் தேடும் செயல் எதிரி மீதான வன்முறை அனுமதிப்பதில்லை.’ – மகாத்மா காந்தி