இந்தப் பிரிவில் வரக்கூடிய நடவடிக்கைகள் சகல மனித இனத்திற்கும் சகிப்புத்தன்மையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் காண்பிப்பதற்கு பங்குபற்றுனர்களுக்கு உதவி செய்யும். பங்குபற்றுனர்கள் தமது மனப்பாங்கு, எண்ண ஓட்டங்களை, நடத்தையை மாற்றிக் கொண்டு வேறுபாடுகள், தப்பெண்ணங்கள் மற்றும் வார்ப்புச் சிந்தனைகளுக்கு அப்பால் நினைக்கத் தொடங்குவார்கள். இது அவர்களது ஒத்துணரும் கொள்ளளவை பலப்படுத்துவதோடு வேறுபாடுகளினதும் அதனால் வரக்கூடிய வளங்களையூம் போற்றுவதற்கு அறிந்து கொள்வார்கள்.
பிரதிபலிப்பு குறிப்புக்கள்
- சகிப்புத்தன்மை என்பது சமாதானத்தை இயலுமானதாக்கக்கூடிய ஒரு நற்பண்பாகும்.
- சமாதானம் இலக்காக இருந்தால் சகிப்புத்தன்மை அதற்கான வழியாகும்.
- சகிப்புத்தன்மை இன்மைக்கான விதைகள் பயமும் அறிவின்மையுமாகும்.
- சகிப்புத்தன்மையுடன் இருப்பதற்கு ஏனைய மக்களைப் புரிந்து கொள்வதும் மதிப்புக் கொடுப்பதும் அவசியமாகும். எங்களது குடும்பம், நண்பர்கள், சமூகத்துடன் ஒற்றுமையாக இருப்பதற்கு நாம் எமது வேற்றுமைகளைப் புரிந்து கொள்வதற்கும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளவும் கூடிய சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.