விழுமியங்கள் தான் சமூக, அரசியல், சமயம் மற்றும் கலாசார வாழ்க்கையின் படிகளாகும். தனிமனிதரினதும் குழுக்களினதும் நடத்தையை வழிநடத்தும் கொள்கைகளக அவை உள்ளன. நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், சடங்குகளும், சமய கலாசார முறைமைகளிடையே வேறுபட்டாலும் அங்கே பிரதான விழுமியங்கள் ஒன்று சேர்கின்றன. இந்த விழுமியங்களினை அங்கீகரிப்பதன் கருத்து தத்தமது சம்பிரதாயங்களையோ நம்பிக்கைகளையோ இழப்பதல்ல. மாறாக, சகலரும் சமமானவர்கள் என்ற பற்றுறுதியோடு எல்லோருக்கும் நீதியையும் இணக்கப்பாட்டையும் உருவாக்குவதற்கு உழைப்பதாகும்.
இன்று உலகளாவிய நாடுகளிடையே விழுமியங்கள் பற்றிய கல்வி என்றுமில்லாதவாறு தேவைப்படுகிறது. அதிகரித்துள்ள சமய கலாசார, பன்மைத்துவ அனுபவங்களின் வளங்கள் அகிலத்தை வாழ்வதற்குரிய மிகச்சிறந்த இடமாக மாற்றுகின்றன. ஆனாலும் இத்தகையதொரு சூழலில் சாதகமான விழுமியங்கள் கடைப்பிடிக்கப்படாத சந்தர்ப்பத்தில் உணர்திறனின்மை காரணமாக இறுக்கத்தன்மையும், முரண்பாடுகளும் உருவாகின்றன. நாங்கள் யாவரும் நம்மை வழிநடத்தும் விழுமியங்களை விருத்தி செய்து கொள்வதோடு, அவற்றை நமக்கும், நமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் தகுந்தவாறு பிரயோகித்து சமாதானமாகச் சேர்ந்து வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
விழுமியங்கள் பற்றிய இந்த கற்றல் அலகு, இளைஞர்கள் உள்ளிட்ட இலங்கையின் சமுதாயத் தலைவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பல்வேறு சமய, இன மற்றும் கலாசாரக் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இணைந்து செயலாற்றியதன் வெளிப்பாடாகும். சகலருக்கும் தமது சாதகமான விழுமியங்களை வெளிப்படுத்துவதற்கு உள்ளார்ந்த தன்மை இருப்பதையும், அவரவர் நடத்தைகள் இந்த விழுமியங்களால் வழி நடத்தி, சமூகத்தில் வாழ்வதன் கருப்பொருளுக்கான பிரச்சினைகளை இவ்வலகு அணுகுகின்றது. இவற்றை எவ்வாறு பிரயோகிப்பது என்று கற்றுக்கொள்வதற்கான உதவியே நமக்குத் தேவைப்படுகின்றது.
“அனுபவம் ஒரு மிகப்பெரிய ஆசான்” என்ற கூற்றுக்கிணங்க, இக்கற்றல் அலகு வசதியளிப்போருக்கு சாதகமான விழுமியங்களை மாதிரியாக்கி, அவற்றை ஒரு தொகையான பிரயோக நடவடிக்கைகளாக அறிமுகம் செய்து விழுமிய அடிப்படையிலான நடத்தையாக உருமாற்றுவதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
இக்கற்றல் அலகின் குறிக்கோள்களாவன:
- இலங்கையில் சமாதானமும், இணக்கப்பாடும் ஏற்படுவதற்கு முக்கியமான பகிர்ந்து கொள்ளக்கூடிய விழுமியங்களின் நடைமுறைகளை பலப்படுத்தும் செயற்பாடுகளை நடத்துவதற்காக இளம் தலைவர்களுக்கு அல்லது ஏனைய வசதியளிப்பவH;களுக்கு நடைமுறைக் கருவிகளை அது அளிக்கிறது.
- சமூகத்தின் உணர்திறனை விருத்தி செய்து பின்வரும் விழுமியங்களைப் பிரயோகிக்கும் திறனைக்கூட்டுவது: சமாதானம், மரியாதை, இரக்கம், சகிப்புத்தன்மை, நேர்மை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு என்பனவாகும்.
- சகல தரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த விழுமியங்கள் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் சகல தரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இவற்றை அனுபவிக்கும் உரிமை இருப்பதையும் பற்றிய உணர்திறன்களை விருத்தி செய்தல்.
- மக்களைக் கலந்துரையாடல்களில் ஈடுபடுத்தி செவிமடுக்கவும், பேசவும் வைப்பதன் மூலம் வேறுபாடுகள் பற்றி அதிக கூருணர்வையும் ஏனையோர் பற்றிய உணர்திறனையூம் ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மக்களை வலுவேற்றல்.
- இளைய தலைமுறையினர் தங்களை சமாதானம், மரியாதை, இரக்கம், சகிப்புத்தன்மை, நேர்மை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முகவர்களாக நினைத்து சாதகமாக சமூக ஈடுபாடு கொள்ள அகத்தூண்டுதலளித்தல்.
- இளைய தலைமுறையினர் தத்தமது சமுதாயங்களில்; இருக்கும் பிரச்சினைகளை சமாதானமாகவும், மரியாதையாகவும் எதிர்கொள்வதற்கான ஆற்றலைக் கொடுத்தல்.
இந்த அலகுஇ சாதகமான விழுமியங்களை விருப்புடனும்இ பற்றுறுதியூடனும் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் எவராலும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டடிருக்கிறது. இக்கற்றல் அலகினை நாடு முழுவதும் இளைஞா; குழுக்களுடன் பயன்படுத்தக்கூடிய அளவூ நெகிழ்ச்சியூடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ் அலகானது மாற்றியமைக்கத் தக்கதாகவூம் மற்றும் உள்ளகப் பிரதேச பங்குபற்றுனாpனது உதாரணங்களுக்கு ஏற்ப அல்லது வேறுபட்ட வயதானோருக்கும் பயன்படுமாறு மாற்றியமைக்கவூம் முடியூம்.
- விழுமியம் சார் வசதியளித்தல் முறை வசதியளிப்பவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். (வசதியளிப்பவர்களுக்கான கருவிப்பெட்டகத்தைப் பார்க்கவும்.)
- சமாதானம், மதிப்பு, பச்சாதாபம், சகிப்புத்தன்மை, நேHமை மற்றும் ஒத்துழைப்பு போன்ற விழுமியங்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள்.
விழுமியம்சார் வசதியளித்தல் முறைகள் தொடர்பான கற்றல் அலகின் முதலாம் பாகமானது விழுமியக் கற்கை அமர்வுகளில் வசதியளிப்பவர்களாக வர எண்ணியுள்ளோருக்கானதாகும். செயற்றிறன் மிக்க செவிமடுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகள் மற்றும் ஆறு விழுமியங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், அதை தொடர்ந்து பின்வரும் பிரிவுகளில் உள்ள நடவடிக்கைகளை வசதியளிப்பவர் பயன்படுத்துவார்.
இந்த விழுமியங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அர்ப்பணிப்பினை மேம்படுத்துவதற்கு வசதியளிப்பவர்கள் பயன்படுத்தக் கூடிய பிரதான உள்ளடக்கங்களாக, சமாதானம், மதிப்பு, பச்சாதாபம், சகிப்புத்தன்மை, நேர்மை மற்றும் ஒத்துழைப்பு அல்லது ஒன்றாக பணியாற்றல் என்பன உள்ளன. விழுமியங்கள்சார் நடவடிக்கையானது பிரதிபலித்தலை ஊக்குவிப்பதுடன், உள்நாட்டு விழுமியங்களை பிரயோகிக்கவும், நடத்தைகளை மாற்றவும் பங்குபற்றுனர்களுக்கு உதவும் பயிற்சிகளாகவும் உள்ளன.
குறிப்பிட்ட பிரிவில் கலந்துரையாடப்பட்டுள்ள விழுமியம் தொடர்பான தனிப்பட்ட மற்றும் உள்ள பொருத்தப்பாட்டினை புரிந்து கொள்வதற்கு பங்குபற்றுனர்களுக்கு உதவும் பிரதிபலிப்பு புள்ளிகளுடன் ஒவ்வொரு பிரிவும் ஆரம்பிக்கின்றது.
- விழுமியங்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் எவ்வளவு தூரம் முக்கியமானவையென உணர்ந்து கொள்வதற்கு பிரதிபலிப்புகள் எமக்கு உதவி செய்கின்றன.
- விழுமியங்கள் புரிந்து கொள்ளப்படும் மற்றும் பயிற்சிக்கப்படும் பல்வேறு வழிகளையும் மற்றும் பல்வேறு நம்பிக்கைகளை, இனக்குழுக்கள் மற்றும் கலாசாரங்கள் இடையிலான பொதுத் தன்மையையும் அங்கீகரிப்பதற்கான வழிகளாக பிரதிபலிப்புகள் உள்ளன.
நடவடிக்கைகள் பெரும்பாலும் பயிற்சியாக விழுமியங்களுக்கும்
நடவடிக்கைகள் பெரும்பாலும் பயிற்சியாக விழுமியங்களுக்கும் நடத்தைக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றன. விழுமியம் சார்ந்த நடத்தையை அனுபவிக்கும் போது பங்குபற்றுனர்கள் தமது நடவடிக்கைகள் பெறுமானங்களுக்கு எதிர்வினையாக இருப்பதை உணர்வதோடு, அவர்கள் செயற்படும்போது எப்பொழுதும் நடத்தைகள் ஒரு குறிப்பிட்ட தொகுதியான பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமையும் எனவும் கற்றுக்கொள்கின்றனர். இதனை உணரும்போது பங்குபற்றுனர்கள் எப்படி தமது செயலும் எதிர்செயல்களும் தாம் சாதகமான விழுமியங்களைத் தெரிவு செய்வதை உறுதி செய்கின்றன என்றும் கற்றுக்கொள்கின்றனர். உதாரணமாக, பங்குபற்றுனர்கள் தாம் சகிப்புத்தன்மை எனும் கருத்தியலினைப் புரிந்துகொள்வதாகக் கூற முடியும். ஆனால் இது அவசியம் அவர்கள் தமது நடத்தைகளில் சகிப்புத்தன்மையினைக் கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்காது. ஆழமான சிந்தனை, அனுபவம் மற்றும் கலந்துரையாடல் ஆகிய செயன்முறைகளுக்கு அவர்கள் உட்படும்போது மாத்திரமே அவர்களால் நாளாந்த வாழ்க்கையில் சகிப்புத்தன்மையினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க முடியும்.
விழுமியங்கள்; பற்றிய கற்பித்தலின் ஆரம்பத்தில் சொல்லப்படும் முனைப்பான செவிமடுத்தல் பற்றிய செயற்பாடுகளை உங்கள் குழுவுடன் தொடங்க வேண்டும். முனைப்பான செவிமடுத்தல் என்பது சாதகமான பெறுமானங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கானதொரு அத்திவாரமான திறனாகும். பங்குபற்றுனர்கள் செவிமடுத்தலின் முக்கியத்துவத்தை உணரும்போது அவர்களுக்கு மிஞ்சியிருக்கும் பெறுமானம் சம்பந்தமான நடவடிக்கைகளில் பயனுறுதியுடன் ஈடுபடக்கூடியதாயிருக்கும்.
பிரதிபலிப்புக் குறிப்புக்கள், நடவடிக்கைகளை அறிமுகம் செய்யும் உதாரணங்களாக நடவடிக்கை இடம்பெறும் சந்தர்ப்பத்தை விளக்கவும் உரையாடலை தூண்டுவதற்கும் பாவிக்கலாம். அவற்றை நடவடிக்கைகளுடன் இணைத்தும் ஆதரித்தும் அதனைக் கற்றலுக்கும் உரையாடலுக்கும் வழிகாட்டி ஆக்கலாம். அத்துடன் வசதியளிப்பவHகள் வேறு எவ்வித ஆக்கப்பூர்வமான வழிகளையும் தேடிப் பாவிக்கலாம்.
பிரதிபலிப்புக் குறிப்புக்களைப் பின்பற்றி தொடரான பல நடவடிக்கைகள் பங்குபற்றுனர்களின்; ஒவ்வொரு விழுமியத்தையும் பற்றிய புரிந்துணர்வையும் பிரயோகிக்கும் கொள்ளளவையும் ஆதரிக்கக்கூடியதாக இருக்கும். இதற்கான நடவடிக்கைகளுக்கு வேறுபட்ட கால அளவுகள் தேவைப்படுவதால் தங்களது சூழலில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தேவைப்படும் நேரத்தை அமர்வின் ஆரம்பத்திற்கு முன்னரே கணித்து நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இறுதி; வரை முற்றுப்பெறுவதற்கு ஏற்றபடி இடமளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாகத்திலும் முதல் நடவடிக்கை பொதுவில் ஒவ்வொரு விழுமியத்துடனும் பங்குபற்றுனரின் தனித்த அனுபவத்தைப்பற்றி ஒரு கலந்துரையாடலைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனைச் செய்வதன் மூலம் பங்குபற்றுனர்கள் ஆசிரியர்களாக அல்லது வளப்பகிர்வாளராக மாறுகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது மாத்திரமே வசதியளிப்பவரின் வகிபாகமாகும். இது ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைவதன் காரணம், ஒவ்வொரு பங்குபற்றுனரையும் ஆரம்பம் முதலே ஈடுபாடு காட்ட வைப்பதனால் அவர்களுக்கு தாமும் பங்களிப்பு செய்கின்றோம் என்றும், தமக்கும் குறித்த தலைப்பு சம்பந்தமான விடயங்களைப் பற்றிய அறிவிருக்கிறதென்ற உணர்வும் ஏற்படும். விழுமியம் சம்பந்தமான கற்றல் இவ்வணுகுமுறை மூலம் பங்குபற்றுனர்களின் நம்பிக்கையை முன் நகர்த்தி அவர்களுக்கு தமது பாரிய அனுபவம் பங்களிப்புச்செய்யும் என்ற உணர்வையும் அளிக்கிறது. பங்குபற்றுனர்களுக்கு தமது திறன்கள் தகைமைகள் பற்றி நம்பிக்கை எழும்போது அவர்களுக்கு சாதகமான பெறுமானங்களை அனுசரிக்கும் திறமையும் சுயமான இரக்க உணர்வும் சுய மரியாதையும் ஏற்படுவதால் ஏனையோருக்கு இரக்கம் காட்டவும் மரியாதை செய்யவும் இயலுமாகிறது.
நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது நீங்கள் பயன்படுத்தக் கூடிய சரியான சொற்களை பல்வேறு நடவடிக்கைகள் ஆலோசிக்கின்றன. உதாரணமாக, குறிப்பிட்ட கேள்விகள் அல்லது கூற்றுக்களினைத் தொடர்ந்து ‘கேளுங்கள்’ அல்லது ‘சொல்லுங்கள்’ போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் அடிக்கடி அவதானிப்பீர்கள். வசதியளிப்பவரின் வேலையை இலகுவாக்குவதற்கு இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான பெயர்களை பயன்படுத்துவதற்கு தயங்க வேண்டாம். ஆனால், ஒவ்வொரு சொல்லிற்கும் குறிப்பிட்ட அர்த்தத்தினை குறிப்பிடுவது சிறந்த எண்ணமாகும்.
இந்த கற்றல் அலகின் நோக்கம் வசதியளிப்பவர்களை வழிநடத்துவதற்கு உதவி, அவர்களின் விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வை விருத்தி செய்தலாகும். இந்த நடவடிக்கைகள் பல்வேறு குழுக்களுக்கேற்ற முறையில் மாற்றக்கூடிய அளவிற்கு நெகிழ்வூத்தன்மை உடையன. கற்றல் அலகில் உள்ள நடவடிக்கைகளை பயன்படுத்துவதன் மூலம் வசதியளிப்பவர்கள் தமது சொந்த புத்தாக்கமான நடவடிக்கைகளைக் கண்டுபிடித்து இக்கற்றல் அலகுடன் இணைப்பதற்கு அகத்துதூண்டுதல் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கற்றல் அலகுகளில் உள்ள பிரிவுகள் பங்குபற்றுனர்களை விழுமியம் பற்றி தமக்குரிய பாணியில்; புரிந்து கொள்வதற்கு வசதியளிப்பவர்கள் வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்குபற்றுனர்கள் சாதகமான பெறுமானங்களை உள்ளீர்ப்பதற்கு வசதியளிப்பவர்கள் கற்றல் அலகின் செயல் நோக்கத்தைப் பின்பற்றி விழுமியங்கள் பற்றிய விரிவுரைகளைத் தவிர்த்து அதாவது பங்குபற்றுனர்கள்; தொடர்பு பரிமாற்றம் உள்ள கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தமக்குரிய தனித்தன்மையான வகையில் பெறுமானங்களைப் புரிந்துணர்ந்து கொள்ள வைப்பதாகும். இதன் காரணம் பங்குபற்றுனர்கள் சாதகமான பெறுமானங்களை தமது நாளாந்த நடத்தையில் உள்வாங்கி அவர்கள் அப்பெறுமானங்கள் பற்றி தமது வாய்மொழியில் விளக்க முற்படும்போது அவற்றை உண்மையிலேயே உணரக்கூடியதாக இருப்பதாகும்.
முன்மாதிரிகளாக வசதியளிப்பவர்கள்
சாதகமான விழுமியங்களைப் பயனுறுதியான முறையில் ஊக்குவித்து ஆதரிப்பதற்கு ஆசிரியர்களும் வசதியளிப்பவர்களும் தாமே இப்பெறுமானங்களை எடுத்துக் காட்டும் முன் மாதிரிகளான வகையில் கற்றுக் கொடுத்தும் ஊக்குவிக்கும் முறைகள் மற்றும் நடந்து கொள்ளும் தொனியிலும் மக்களுடன் ஏற்படுத்தும் இடைவினையிலும் தம்மை இனங்காட்ட வேண்டும். இதனாலேயே கற்றுக்கொடுத்தல் விழுமியங்கள்; கற்றல் அலகின் பொருளடக்கத்தைப் போலவே முக்கியத்துவம் பெற்றவை. உதாரணமாக, சமாதானம் பற்றிப் பேசும் போது வசதியளிப்பவர், சமாதானம் பற்றிய தனது ஆர்வத்தை தனது மொழியிலும், நடவடிக்கைகளிலும் எடுத்துக் காட்ட வேண்டும். சமாதானம் பற்றிப் பேசும் போது பங்குபற்றுனருக்கு கோபத்துடன் குரலுயர்த்திப் பேசுவது கற்றுக் கொடுக்கும் பாடத்தின் நோக்கத்தையே தோற்கடித்து விடும்.
இது தொடர்பில் சாதாகமான விழுமியங்களான இரக்கம், ஒத்துழைப்பு சமாதானம் போன்றன தொடர்ச்சியாக வெளிப்பட்டு மக்கள் தாங்கள் பெறுமதி உடையவரகள், தம்மை புரிந்து கொள்கிறார்கள் அல்லது தாம் மதிக்கப்படுகிறார்கள் என்று தமது சூழலை உணரும் போது தான் பெறுமானங்கள் பெருமளவில் உள்ளகப்படுத்தப்படுகின்றன. ஒரு மனிதன் தன்னைப் பற்றி சிறப்பாகவும், நம்பிக்கையாகவும் உணரும்போது அவர்கள் ஏனையோருடன இடைவினையாக்கும் போது சாதகமான விழுமியங்களால் வழிநடத்தப்படுகிறரார்கள். அதனால், விழுமியங்கள் ஒரு தனிமனிதரது உணர்வுகளையும் புரிந்துணர்வையும் ஆன்மீக பரிமாணங்களையும் ஆதரிக்கும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சூழலில் கற்பிக்கப்படுதல் முக்கியம்.
சாதகமான விழுமியங்கள் அவர்கள் அவற்றை புத்திசாதுரியமாகப் புரிந்து கொள்ளும் போது மட்டுமன்றி அதனை அவர்கள் அனுபவ ரீதியாகப் பார்க்கும் போது தான் அவர்களது நடத்தையை வழிநடத்த முடிகிறது. எனவே, பங்குபற்றுனர்கள் விழுமியங்கள் இருப்பதை அல்லது இல்லாததை தமது வாழ்க்கை அனுபவங்களாக தமது குழுக்களில் பிரதிபலிக்கும் வண்ணம் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இந்த அணுகுமுறையில பங்குபற்றுனர்கள் தாங்கள் ஏற்கெனவே நிறையத் தெரிந்து வைத்துள்ளதோடு அவற்றைப் பின்பற்றிய அனுபவங்களையும் நிறையப் பெற்றிருப்பதாக உணருவார்கள். இந்தத் தருணத்;திலிருந்து அவர்கள் தமது வாழ்க்கையில் எவ்வாறு அவற்றை தூண்டி விடவும், நாளாந்த வாழ்வில் விழுமியங்கள் பற்றிய கற்றலின் தேவையைப் புரிந்து கொள்வதற்கும் இலகுவாக இருக்கும்.
இந்தப் புரிதலின் அடிப்படையில் வசதியளிப்பவர், விழுமியங்கள் எவ்வாறு கற்றுக் கொள்ளப்படுகின்றன என்று அறிந்து கொள்வதோடு விளக்கங்களுடன் கூடிய நீண்ட விரிவுரைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். அதைவிட அவர்கள் பங்குபற்றுனர்களையே அதிகளவு பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பதன் மூலமும், விடைகளுக்கு செவி மடுப்பதன் மூலமும் விழுமியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவற்கு தூண்டுவதே வசதியளிப்பவரின் வகிபங்காகும். அடுத்துவரும் பாகங்களில், இதனை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய வழிகாட்டலும் இரக்கம் மற்றும் முனைப்பான செவிமடுத்தல் பற்றியும் சிறந்த உதாரணங்களைத் தருவதனால், நடவடிக்கைகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கான சிறந்த ஒத்துழைப்பையும் தரும்.

பங்குபற்றுனரை மையமாகக் கொண்டதோர் அணுகுமுறையில் ஒரு பங்குபற்றுனர் வசதியளிப்பவரை ஒரு கேள்வி கேட்டால் வசதியளிப்பவர் “நீங்கள் அதற்குரிய எந்த பதிலைக் கூற விரும்புகிறீர்கள்? என்று கேட்டால் பெரும்பாலான சமயங்களில் கேட்பவர் அதனைப்பற்றி ஏதாவதொரு யோசனையை வைத்திருப்பதையும் அதற்கு அவருக்கு அதனை விளக்க ஒரு தூண்டுகை மட்டும் தேவைப்படுகிறது என்றும் பார்க்க வேண்டும். பங்குபற்றுனர்கள் தமது சொற்களில் மறுமொழியைக் கூறும் போது பெரும்பாலும் அந்த அறிவினை அவர் உள்ளகப்படுத்தி விட்டதாகக் கொள்ள முடியும்.
- மக்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்தி இறுதியில் முரண்பாடுகளைக் குறைக்கும்.
- நம்பிக்கையையும் சுயமதிப்பையும் ஊக்குவிப்பதன் மூலம் பங்குபற்றுனர்களுக்கு பெறுமானங்களை பிரயோகிப்பதற்கான இயலுமையை உருவாக்கக்கூடியதாயிருக்கும்.
- பிரச்சினைகளுக்கு நிலைத்திருக்கக்கூடிய தீர்வுகளை இனங்காண முடியும்.
முனைப்பான செவிமடுத்தல் என்பது பேசுபவருக்கு அவரது வார்த்தைகளை நன்கு கேட்டு அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டதாக எடுத்துக் காட்டுவதாகும். அது கவனமாகவும், வெளிப்படையாகவும், இருப்பதையும் அவர் கூறியதன் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் சரியாகப் பிரதிபலிப்பதுமாகும்.
பெரும்பாலும் மக்கள் ஒருவர் பேசுவதைக் கேட்கும் போது, அவருக்கு சொல்லப் போகும் பதிலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பேசுபவர் கூறுவதற்கு உண்மையிலேயே அவர்கள் செவிமடுக்காததோடு அவர்களது கருத்தினையோ அல்லது பிரச்சினையினையோ புரிந்துகொள்வதுமில்லை. இதனால் அவர்களது உணர்ச்சி வேகத்தை அறிந்து கொள்ள முடியாது போய் விடும். ஏனென்றால் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்பவர் தமக்கு அவர் கூறுவது எத்துணை தேவையானதாயிருக்கும் என்று நினைப்பதில் கூடுதல் கவனத்தை செலுத்துவதாகும். அத்துடன் பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொள்ளாது ஒரு பொதுவான பதிலாக அவர்களை இடைமறித்து குற்றம் சுமத்தி தீர்ப்பு அல்லது தீர்வுகளை எட்டுவதாகும்.
ஒரு சிறிய பிரச்சினை எவ்வாறு பாரிய மோதலாக வெடிக்கலாம் என்பதனைப் பின்வரும் உதாரணம் காட்டுகின்றது:
உதாரணமாக ஒருவர் ‘நான் அனிஸ்கவை வெறுக்கிறேன். அவர் எப்போழுதும் தனது வண்டியை பாதையின் நடுவில் விட்டுச் செல்கிறார்’ எனக் கூறினால், இதற்கு சிலர் “இதென்ன பெரிய பிரச்சினையா? நீ வேறு வழியாகச் செல்லலாமே” என்று கூறலாம். இத்தகையதொரு பதில் ஒருவரது உணர்ச்சியை அலட்சியப்படுத்துவதோடு அவரது பிரச்சினை தேவையற்றது என்ற விதத்தில் நடந்ததாக இருக்கும்.
மாறாக, நீங்கள் “அனிஸ்க அவரது வண்டியை அந்த விதத்தில் விட்டுச் சென்றதால் நீங்கள் அவருடன் கோபப்படுகிறீரா? என்று கேட்கலாம். இந்தப் பதிலில் நீங்கள் முனைப்பாக செவிமடுத்தீர்கள் என்று தெரிய வருகிறது. ஒருவர் சொல்வதைப் பிதிபலிப்பதன் மூலம் அவர் சொன்னதை நீங்கள் செவிமடுத்தீர்கள் என்பதை நிரூபிப்பதோடு அவரது கதையைத் தொடர்ந்தும் கூறுவதற்கு ஊக்கமளிக்கிறீர்கள். உதாரணமாக அவர் தொடர்ந்தும் சொல்லலாம் “ஆமாம் எனக்;கு மிகவும் ஏமாற்றமாயிருக்கிறது. காரியாலய முகாமையாளர் காலையில் முன்வாசல் கதவை திறக்காமல் விட்டு விட்டார். அதனால் நான் பின் வாசல் கதவால் தான் போக வேண்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நான் அவரது வண்டியை நகர்த்த வேண்டியேற்படுவதால் வேலைக்குப்பிந்த வேண்டியுள்ளது.” கேட்பவர் “காரியாலய முகாமையாளர் காலையில் முன்வாசல் கதவை திறக்காமல் உன்னை பின் கதவால் வரச் சொல்லியிருப்பதாலும் வண்டி பாதையை மறித்து இருப்பதாலும் நீ ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறாய்” இதற்கு பேசுபவர் “ஆமாம், அதனை அனிஸ்கவிற்கு விளக்கி நான் காரியாலயத்திற்குப் போவதற்கு பின் கதவை உபயோகிக்க வேண்டியிருப்பதைச் சொல்ல வேண்டும்.” இந்த முனைப்பான செவிமடுத்தல் செயன் முறையால் பேசுபவருக்கு தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததோடு அவரது கோபம் தணிந்து ஒரு தீர்வினைத் தானே தேடவும் ஏதுவாகிறது.
பிரதான படிமுறை | ஏன் இது முக்கியமானது? | |
---|---|---|
1 | உங்களுக்கு உண்மையாகவே ஒருவரது கதையைக் கேட்க நேரமின்றி இருந்தால் நீங்கள் “எனக்கு உங்கள் கதையைக் கேட்பதற்கு தேவையிருக்கிறது. ஆனால் தற்சமயம் எனக்கு நேரம் போதவில்லை. நாங்கள் வேறொரு நேரத்தில் இது பற்றிப் பேசலாமா?” என்று கேட்க முடியும். | இது மிகவும் முக்கியம். ஏனென்றால் உங்களால் முனைப்பான செவிமடுத்தலின் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றமுடியாது போகலாம். காரணம் நீங்கள் வேறு எதையாவது செய்வதைப் பற்றி அல்லது எங்காவது போவதற்கு பிந்துவதாக இருக்கலாம். |
2 | உங்களது உடல் மொழி நீங்கள் பேசுபவரின் சொற்களை கூருணர்வுடன் கேட்பதை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பேசுபவரின் முகத்திற்கு நேரே திரும்பி, முடியுமானால் அவருடன் நேரே கண் தொடர்பை ஏற்படுத்தி பேசுபவரில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். நீங்கள் அவரது அருகிலோ அல்லது ஒரு பிள்ளையானால் குனிந்து அவரது மட்டத்தில் இருக்க வேண்டும். வேறெந்த வகையிலாவது பேசுபவருக்கு உடலளவில் நீங்கள் செவி மடுக்கிறீர்கள் என்ற உணர்வைக் கொடுக்க வேண்டும். | பேசும் போது வேறெங்காவது பார்த்துக் கொண்டிருப்பதோ அல்லது கவனக்குறைவாக இருப்பதோ (உதாரணமாக, உங்கள் குறிப்புகளைப் பார்ப்பது அல்லது யன்னலுக்கு வெளியே பார்ப்பது) பேசுபவருக்கு மதிப்புக் குறைவான பெறுமானத்தையும் உங்களது அசிரத்தையையும் காட்டும். |
3 | குறைந்த இடைவெளிகளில் பேசுபவரை இடைமறித்து அவர் கூறும் சொற்களை மீளவும் அல்லது சுருக்கமாக கூற வேண்டும். அவர்களது சொற்களைப் பாவித்து அதன் பொருளைச் சுருக்கமாகக் கூறலாம். செவிமடுத்தல் என்பது வெறுமனே அவர்களது சொற்களை மட்டும் கேட்பதல்ல. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் கவனித்தலாகும். |
இதனைச் செய்வதன் மூலம் அவர் சொன்னதை சரியாக விளங்கியதாக இருப்பதோடு அவர்கள் நீங்கள் சரியாக விளங்காவிட்டால் துக்கப்படுவதோடு ஏமாற்றப் பட்டதாகவும் உணர்வார்கள். அவர்களது சொற்களை மீளக்கூறுவதாலோ அல்லது பொழிப்புரை செய்வதாலோ நீங்கள் அவர்களுக்கு நன்றாக செவி மடுத்ததாக இருப்பதோடு பேசுபவரை மேலும் பேசுவதற்கு ஊக்கமளித்து தொடர்ந்தும் அவர் தனது உணர்ச்சிகளை முழுதாக கூறுவதற்கும் தமது பிரச்சினை தொடர்பான ஒரு தௌpவைப் பெறுவதற்கும்; ஏதுவாக இருக்கும். பேசுபவரது சொற்களையே பாவிப்பதனால் அவர்கள் தமது உணர்வுகளை தெரிந்து கொள்வதற்கும் தமது பிரச்சினையின் ஏற்கும் தன்மையினை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுவதனால் சுய நம்பிக்கையும் உண்டாகிறது. |
4 | எப்பொழுதும்; பேசுபவர் தனது கதையைச் சொன்னதற்கு அவருக்கு நன்றி சொல்லவும். |
தீர்ப்பு கூறுவதையோ அல்லது குற்றம் சுமத்துவதையோ தவிர்க்கலாம்
யாராவது உங்களிடம் ஒரு பிரச்சினையுடன் வந்தால் “ஏன் அதைச் செய்தாய்? அப்படிச் செய்தது முட்டாள்தனம்”, அல்லது “நீ எப்பொழுதும் பிரச்சினைகளைக் கொண்டு வருகிறாய்” போன்ற வசனங்கள் கூறுவதைத்; தவிர்க்கவும். அப்படியில்லாமல் ஆரம்பம் முதலே அவருக்கு தீர்ப்பு சொல்வது போல் குறை கூறாமல் முனைப்பாக செவி மடுப்பதன் மூலம் நீங்கள் அவர் தமது பிழைகளை உணருவதற்கு உதவி புரிந்தவராவீர்கள் (அவர் அப்படி ஏதும் செய்திருந்தால்) ஆரம்பத்திலிருந்தே நீங்கள் அவர்களைப் பற்றிய முடிவுக்கு வந்து ஆரம்பம் முதலே விமர்சிக்கத் தொடங்கிவிட்டால் அந்த நபர் தன்னைப் பாதுகாக்க முயற்சிப்பவராகவும் சுயமாக ஆழமாகச் சிந்திக்காதவராகவும் மாறிவிடுவார். முழுக் கதையினையும் கேட்பதற்கு முன்னர் முடிவிற்கு வருவதும் விமர்சிப்பதும் பயன்தரப்போவதில்லை. அவர்கள் தமது பிழைகளை உணர்ந்து பொறுப்பேற்க முனைவார்கள். விசேடமாக முழுமையான கதையைக் கேட்குமுன் தீர்ப்பு கூறுவதும் குற்றம் சுமத்துவதும் எப்பொழுதும் உதவி செய்யாது.
குறுக்கீடு செய்வதைத் தவிர்க்கவும்
ஒருவருக்கு தனது கதையை சுதந்திரமாகவும், தனக்குரிய விதத்தில் நிதானமாகவும் நேரமெடுத்து சொல்வதற்கு இடமளிக்கவும். இடைமறித்து “எப்படி” அல்லது “ஏன் அப்படி” போன்ற கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்கவும்.
உங்களது சொந்தக் கதைகளைக் கூறுவதைத் தவிர்க்கவும்
பெரும்பாலும் இரண்டு பேருக்கிடையான பேச்சு தனியூரை அல்லது ஓரங்கவூரையாக இருக்கும். அப்போது ஒருவர் தன்னைப் பற்றியும் தனது விருப்புகள் பற்றியும் கூறியதன் பின் மற்றவர் இதற்குப் பதிலாக தன்னைப் பற்றியும் தனது விருப்புகள் பற்றியும் கூறுவார். இப்படியான சூழலில் ஒருவரும் சரியாக செவிமடுக்கப்படாமல் போக, தவறான பொருள் கொள்ளும் நிலையுமேற்படுகிறது. முனைப்பான செவிமடுத்தலில் உங்களது வேலை செவிமடுப்பதும் மற்றையவரைப் பேசுவதற்கு ஊக்குவித்தலுமாகும். உங்களது சம்பாஷனையைக் கேட்பதற்கு வேறொரு பொருத்தமான சமயம் வரலாம்.
அதிகளவு அனுதாபம் காட்டுவதைத் தவிர்க்கவும்
“ பாவம்” அல்லது “நீ சரியான துரதிஷ்டசாலி, உனக்குத் தான் எப்பொழுதும் இப்படி நடக்கிறது” போன்ற சொற்பிரயோகங்களைத் தவிர்க்கவும். இப்படியான கூற்றுகள் அவரை தனது பலவீனங்களில் அமிழ்த்தி விடுவதோடு நம்பிக்கை குறைவாகவும் உணர்வர்.
தீர்வுகள் வழங்குவதைத் தவிர்க்கவும்
எவராவது தனது பிரச்சினைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்தால் நாம் எப்பொழுதும் ஒரு தீர்வைச் சொல்லி உதவ முற்படுவோம். ஆனால் பெரும்பாலும் நாம் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள முன்பே அதனைச் செய்வதுண்டு. மேற்கூறப்பட்ட படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் முனைப்பாக செவிமடுப்பதாலும் நீங்கள்; பேசுபவரே தனது பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெறுவதற்கு வழிகாட்டலாம்.
அனுபவத்தின் மூலம் விழுமியங்களைக் கற்பது போலவே முனைப்பான செவிமடுத்தல் வழிமுறைகளையும் கற்க முடிகிறது. முனைப்பான செவிமடுத்தலை கற்பிப்பதற்கு குழுவுடன் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முன் உமது செவிமடுக்கும் திறன்களை உங்கள் அருகில் இருப்பவர் பேசும் போது கடைப்பிடிக்கவும். அப்போது உங்களது உரையாடல் சாதாரணமானதை விட வித்தியாசமாக இருப்பதைக் கவனிப்பீர்கள்.
மரியாதையாக முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுவது சாதகமான விழுமியங்களைப்; பரிணாமமிக்கக் கூடிய சூழலை உருவாக்குதலில் மேலுமொரு முக்கிய கருவியாகும். மரியாதையான முரண்பாட்டுத் தீர்வுத் திறன்களால் தனிமனிதர்கள் சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்களாக இனங்களிடையே இணக்கப்பாட்டை முன்னேற்ற முடியும்.
முரண்பாட்டுத்; தீர்வு திறன்கள் சிறுவர்களுக்கும் கட்டிளமையானோர்க்கும் இரண்டாவது இயற்கைக் குணமாக வர வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் அதன் விளைவுகளாக சமூக வன்முறைகளும் குடும்ப வன்முறைகளும் வெளிப்பட சிறிய பிரச்சினைகளும் பரந்த முரண்பாடுகளாகத் தீவிரமடைந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
முரண்பாடுகளைக் கையாளுவதற்கு மக்களுக்கு உதவுவதென்பது, அவர்கள் தமது உணர்வுகளை இனங்கண்டு அவற்றைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படு;த்தத் துணை செய்வதாகும். அத்துடன் அவர்களுக்கு ஏனையவர்களின் உணர்வுகளுக்கு பொருள் விளக்கம் தரவும் அவற்றை கூருணர்வுடன் நோக்கி மற்றையவர்களின் கருத்துகளை அங்கீகரிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.
முரண்பாட்டுத் தீர்வு செயன்முறையில் அவசியமாகத் தேவைப்படும் ஒரு அங்கமாக முனைப்பான செவிமடுத்தல் உள்ளது. முரண்படும் திறத்தாருக்கு தமது தரப்பு அக்கறைகளைக் கூறுவதற்கு சந்தர்ப்பம் அளித்து செவிமடுக்கப்;படும் போது அவர்கள் அதிகமாக அமைதியடைந்து முரண்பாட்டைத் தூண்டும் தமது கோபத்தையும், முரட்டுத்தனத்தையும் அகற்றிக் கொள்ள இடமேற்படுகிறது. பெரும்பாலும் கோபம் போன்ற உணர்வுகள் முரண்பாட்டுக் காலத்தில் தோன்றும் மேல்மட்ட உணர்வுகளாகும். கோபத்தின் அடிப்பாகத்தில் உள்ளக உணர்வுகளான பயம், கவலை அல்லது தனிமை போன்ற உணர்வுகள் இருக்கும். தமது உள்ளக உணர்வுகளை முனைப்பான செவிமடுத்தல் செயன்முறை மூலம் வெளிப்படுத்தவும் தமதுணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்றும் அவர்கள் உணரும் போது அவர்களது முரட்டுத்தனமும் தமது முரண்பாட்டை முன்னெடுத்துச்செல்லும் ஆர்வமும் பெருமளவு மறையக்கூடியதாக இருக்கும்.
முனைப்பான செவிமடுத்தலை முரண்பாட்டாளர்களிடையே ஊக்குவிப்பதன் மூலம் இரு சாராரும் தமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்ற புரிந்துணர்வுடனும் ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடனும் நடந்து பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தீர்வை எட்ட முடியும். முரண்பாடுகள் சிறிய பிணக்குகளாக இருந்தாலும், நீண்ட காலப் பிணக்குகளாக இருந்தாலும் பின்வருவன முரண்பாட்டு மத்தியஸ்தத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய கட்டங்களும் படிமுறைகளுமாகும்.
முரண்பாட்டுத் தீர்வின் கட்டங்கள் :
-
01ஒவ்வொருவருடைய கதையையும் கேட்டல்.
-
02மற்றையவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்.
-
03இரு திறத்தாருக்கும் தேவைப்படுவதை இனங்காணல்.
-
04கடப்பாடுடன்; இருத்தல்.
ஒவ்வொரு திறத்தாரிடமும் முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு உதவி தேவைப்படுகிறதா? என்று கேட்கவும். அவர்கள் இருவரும் இணங்கினால், கீழ்வரும் 10 படிமுறைகளை ஆரம்பிக்கவும் இரண்டு திறத்தவருக்கும் சரி நடுவில் அமர வேண்டும். ஒரு திறத்தவரின் அண்மையில் அமர்வதைத் தவிர்க்கவும்.
- 1. என்ன நடந்ததென்று விளக்குமாறு அ திறத்தவரிடம் கேட்கவும்.
- 2. அ திறத்தவர் சொன்னதை திருப்பிக் கூறுமாறு ஆ திறத்தவரிடம் கேட்கவும்.
- 3. என்ன நடந்ததென்று விளக்குமாறு ஆ திறத்தவரிடம் கேட்கவும்.
- 4. ஆ திறத்தவர் சொன்னதை திருப்பிக் கூறுமாறு அ திறத்தவரிடம் கேட்கவும்.
- 5. அது நடந்த போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன என்று அ திறத்தவரைக் கேட்கவும்.
- 6. அ திறத்தவர் சொன்னதை திருப்பிக் கூறுமாறு ஆ திறத்தவரிடம் கேட்கவும்?
- 7. அது நடந்த போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன என்று ஆ திறத்தவரைக் கேட்கவும்?
- 8. ஆ திறத்தவர் சொன்னதை திருப்பிக் கூறுமாறு அ திறத்தவரிடம் கேட்கவும்?
- 9. அவன்-அவளிடம் நடக்க வேண்டியது என்னவென்று ஆ திறத்தவரைக் கேட்கவும்.
- 10. ஆ திறத்தவர் சொன்னதை திருப்பிக் கூறுமாறு அ திறத்தவரிடம் கேட்கவும்.
- 11. அவன்-அவளிடம் நடக்க வேண்டியது என்னவென்று அ திறத்தவரைக் கேட்கவும்.
- 12. அ திறத்தவர் சொன்னதை திருப்பிக் கூறுமாறு ஆ திறத்தவரிடம் கேட்கவும்?
- 13. ஆ திறத்தவர் சொன்னதை கடைப் பிடிப்பதற்கு
அ திறத்தவர் சம்மதிப்பாரா என்றும் அது நடப்பதை அல்லது நடக்காது விடுவதை விரும்புவாரா என்றும் கேட்கவும்? - 14. அ திறத்தவர் சொன்னதை கடைப் பிடிப்பதற்கு
ஆ திறத்தவர் சம்மதிப்பாரா என்றும் அது நடப்பதை அல்லது நடக்காது விடுவதை விரும்புவாரா என்றும் கேட்கவும்? - 15. எடுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு இரண்டு திறத்தாரும் கடப்பாட்டுடன் இருப்பார்களா என்று கேட்கவும்.
இல்லையென்றால் ஒவ்வொரு திறத்தவருக்கும் பிரச்சினை தீர்வதற்கு வேறொரு வழியைத் தேடுமாறு கூறவும். – முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட இருவரிடமிருந்தும் வந்தாலேயொழிய தீர்வு பயனுறுதியுடையதாக இருக்காது என்பதை நினைவில்வை வைத்திருக்கவும்.
இணக்கப்படான விதி முறைகளை ஏற்படுத்தல் என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். இதன் மூலம் பங்குபற்றுனர்கள் தமது குழுவிற்கு பிரயோகிக்கப்படக் கூடிய விதி முறைகளை கொண்டு வருவார்கள். முழுமையான குழுவும் எந்தெந்த விதிகள் பட்டியலிடப்பட வேண்டும் என்று இணக்கம் கண்டு அவற்றை எல்லோருக்கும் தெரியும்படி சுவரில் ஒட்டி வைப்பார்கள். பங்குபற்றுனர்களே தமக்கான விதி முறைகளை இனங்காணும் போது அவற்றைப் பின்பற்றுவதில் கூடிய ஆர்வம் காட்டுவார்கள்.
1. விதிகளை நிர்ணயிக்கும்போது பங்குபற்றுனர்களிடம் சாதகமான மொழியைப் பயன்படுத்துமாறு ஊக்கப்படுத்தவூம். உதாரணமாக “மற்றவர் பேசும் போது பேசாதே” என்று கூறுவதற்குப் பதிலாக “மற்றவர் பேசும் போது முனைப்பாக செவிமடுக்கவும்” என்று கூறலாம். ஒரு பங்குபற்றுனர் ஒரு விதிக்காக எதிர்மறையான வசன அமைப்பை கொடுத்திருந்தால் அவருக்கு சாதகமான சொற்பிரயோகத்தைப் பாவித்து அவர் கூற விரும்புவதை உள்ளடக்கச் செய்யலாம்.
2. வசதியளிப்பவரும் அந்த விதிகளைப பின்பற்ற வேண்டும். உதாரணமாக ‘நேரத்திற்கு வேலை முடித்தல்’; என்பது ஒரு விதிமுறையாக இருந்தால் வசதியளிப்பவரும் ஒரு முன்மாதிரியாக இருந்து, கூட்டத்தை நேரத்திற்கு முடித்து தானும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக்; காட்ட வேண்டும்.
3. குழுவினர் விதிமுறைகளை அமைக்கும் போது அதனை மீறினால் பெறப்போகும் விளைவுகளையும் அடையாளப்படுத்த வேண்டும். அவர்களே விதிமுறைகளை மீறினால் சாதகமான விளைவுகள் வரத்தக்கதானவற்றை தெரிந்தெடுக்க ஊக்கப்படுத்தவும். உதாரணமாக விதிமுறைகளை மீறினால் குழுவிற்கு ஒரு பாட்டுப் பாட வேண்டும் போன்றன.
அமர்வுகளின் போது விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றுணர்ந்தால் அவர்களைத் சுவரில் ஒட்டியிருக்கும் பட்டியலைப் பார்க்கும்படி கேட்க முடியும்.
நீங்கள் செம்மையாக ஆரம்பம் முதல் முடிவு வரை அலகைப் பாவிக்க விரும்பினால், ஒரு கற்றல் செயற்பதிவை விருத்தி செய்வது சிறந்த யோசனையாக இருக்கும். ஒவ்வொரு நடவடிக்கையின் முடிவிலும் அல்லது ஒரு பகுதியின் சில நடவடிக்கைகளின் பின்பும் அவர்கள் செயற்பதிவை அல்லது நாட்குறிப்பேட்டை எழுதுவதற்கு நேரம் ஒதுக்கவும். (கற்றல் செயற்பதிவு ஒன்றிற்கான உதாரணம் ஒன்றைப் பாHக்க). இப்படியாக எழுதுவது பங்குபற்றுனர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதை பிரதிபலிப்பதற்கும் கற்றதை உணர்வதற்கும் உதவி செய்கிறது. இது இன்னொரு வகையில் தாம் கற்றதை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. பங்குபற்றுனர்கள் பகிர்வதற்கு விரும்பினால், வசதியளிப்பவர்கள் செய்திப் பதிவை பங்குபற்றுனரின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் எத்தகைய அணுகுமுறைகள் பலனளிக்கின்றன என்று கணித்து தேவைப்படும் சீரமைப்பை அணுகுமுறையில் மேற்கொள்ளவும் உதவும்.
பங்குபற்றுனர்களுக்கு எழுதுவதற்கான நேரம் அதிகமாகக் கிடைக்கும் போது அவர்கள் சிக்கலான யதார்த்தங்களின் உண்மைகளை அறியவும் விழுமியங்கள் தமது நடத்தையை பல விதங்களில் வழிகாட்டுவதையும் உணர்ந்து கொள்வார்கள். அத்துடன் உணர்வுகளை வெளிப்படுத்தவும், புதிய கருத்துருவங்கள் ஏற்பட்டு பிரச்சினையைத் தீர்க்கும் புதிய திறன்களை பெற கூடியதாகவுமிருக்கும். ஆவணப்படுத்தலை அப்புத்தகத்தின் வேறெந்த நடவடிக்கைகளுக்கும் அறிமுகப்படுத்த முயற்சிக்கலாம். அமர்வின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ 10 நிமிடங்கள் வரை ஆவணப்படுத்தலுக்கு ஒதுக்கலாம். ஆவணம் என்பது கட்டாயமாக வசதியளிப்பவH மீளாய்வு செய்வதல்ல. எது மிகவும் பொருத்தமானதென நீங்களே முடிவெடுக்கலாம்.
விழுமியங்கள் பற்றிய திரைப்படங்கள் அல்லது ஆவணப்படங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒலி-ஒளி ஊடகங்கள் பங்குபற்றுனரின் பெறுமானங்கள் பற்றிய அறிவை ஆழமாக்குவதோடு, விழுமியங்களை தமக்கும் தமது சமூகத்திற்கும் தொடர்புப்படுத்தவும் அறிந்து கொள்வார்கள். பங்குபற்றுனர்களை எப்பொழுதும் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பற்றிய உரையாடலுக்கு உட்படுத்தி அவற்றை ஆவனப்படுத்துவதன் மூலம் பிரதிபலித்து ஓரு குறுகிய கட்டுரை எழுத வைக்கவும்.
விழுமியங்கள் பற்றிய கதைகள் நாசுக்கான செய்தித் தொடர்பாடலில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு நல்ல கதை, பெறுமானம் பற்றிய செய்தியை சிறந்த முறையில் வெளிப்படுத்த முடியும். உங்கள் குழுக்களுக்கு வாசிக்கக் கூடிய அல்லது நடவடிக்கைகளில் பாவிக்கக்; கூடிய கதைகளை சேகரித்துக் கொள்ளவும். நீங்கள் எழுதக் கூடியவராக இருந்தால் உங்களது கதைகளை எழுதி குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளவும்;.
இப்பிரிவில் விழுமியங்கள் பற்றிய பாட்டுக்கள் எதையாவது அறிந்திருந்தால் அதனை பிரிவின் ஆரம்பத்திலேயே குழுவுக்குப் போட்டுக் காட்டவும். பாட்டுக்கள் ஏற்படுத்தும் சூழல் மக்களே பிரதிபலிக்க வைத்து விழுமியங்களை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். கலந்துரையாடலுக்கு முன் ஒரு பாட்டைக் கேட்பதுவும் குழுவை விடயத்தலைப்பினுள் மையப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.