img_container
09 Jan

Pic Your Values - Photography Competition 2020

Venue : Colombo
Date : 01/09/2020
Time : 11:00 AM

என்ன? ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினத்தை கொண்டாட இந்த ஆண்டு ‘Pic Your Values’ மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கிறது . ஆசியா மன்றம் அனைத்து புகைப்படக் கலைஞர்களையும் ஒரு சிறந்த இலங்கையை ஊக்குவிக்கத் தூண்டுவதைப் பற்றி சிந்திக்க அழைக்கிறது, மேலும் இதை புகைப்படம் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வாய்ப்பு அமைதி, சகிப்புத்தன்மை, மரியாதை, நேர்மை, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய ஆறு முக்கிய மனிதநேய மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது ‘உங்கள் மதிப்புகளைத் தேர்ந்தெடுங்கள்’ எனும் கருப்பொருளுடன் புகைப்படம் எடுக்கும் போட்டி. யாருக்காக ? 18 மற்றும் 29 வயதுக்கு ( ஆகஸ்ட் 19,2020இல்) இடைப்பட்ட அனைவர்க்கும். எவ்வாறு 1.மேற்குறிப்பிட்ட விழுமியங்களில் ஒன்றை பிரதிபலிக்கும் புகைப்படம் ஒன்றை எடுங்கள் 2.ஆகக் கூடியது 3 புகைப்படங்கள் வரை சமர்பிப்பதற்கு உங்களால் முடியும். (ஒரு விழுமியத்திற்கு ஒரு புகைப்படம் மாத்திரம் என்ற வகையில்) 3. விழுமியத்தின் அடிப்படையில் புகைப்படத்திற்க்கு பெயரிடுங்கள் (உதாரணமாக,'சகிப்புத்தன்மை' என்பதனை பிரதிபலிக்கும் புகைப்படத்தை நீங்கள் எடுத்தால், அந்தப் புகைப்படத்திற்க்கு 'சகிப்புத்தன்மை' எனப் பெயரிட வேண்டும்). 4.உங்களுடைய புகைப்படங்களை picyourvalues@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 5.உங்களுடைய மின்னஞ்சலில் பின்வரும் விடயங்களை உள்ளடக்குங்கள்; • முழுப்பெயர் - • பிறந்த திகதி- • தேசிய அடையாள அட்டை இலக்கம் - • வதிவிட முகவரி - • தொடர்பு இலக்கம் ( நிலையான தொலைபேசி மற்றும் கையடக்கதொலைபேசி இரண்டும் இருக்குமாயின் விரும்பத்தக்கது) • நீங்கள் தெரிவு செய்த விழுமியத்தை புகைப்படம் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பது பற்றிய தலைப்பு மற்றும் சிறிய விளக்கம் ஒன்று (ஒவ்வொரு விளக்கத்திற்கும் ஆகக் கூடியது 50 சொற்கள் அனுமதிக்கப்படும்) ஏன் • ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு ஆசிய மன்றத்தினால் சான்றிதழ்களும் பெறுமதியான பரிசுப்பொதிகளும் வழங்கிவைக்கப்படும். • வெற்றிபெற்ற புகைப்படங்கள் புகைப்பட கலைஞர்களின் பெயருடன் எமது values4all என்ற வலைத்தளத்திலும், கைபேசி செயலிகளிலும் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படும். கைப்படம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்: • JPEG வடிவில்புகைப்படங்கள் சேமிக்கப்படல் (save) வேண்டும். • புகைப்படத்தின் காட்சி அளவு (ரெசலூஷன்) ஆகக் கூடியது 300 dpi ஆக இருத்தல் வேண்டும். • வர்ணங்களில் அல்லது ஒரு வர்ணத்தில் புகைப்படம் அமையலாம். • கைபேசியில் அல்லது டிஜிட்டல் கமராவில் புகைப்படங்கள் எடுக்கப்படலாம். முக்கிய குறிப்பு: புகைப்படத்தில் 18 வயதுக்கும் குறைந்த குழந்தை அல்லது குழந்தைகள் இருந்தால் புகைப்படக்காரர் அக்குழந்தைகளின் பெற்றோரிடம் அனுமதி பெறுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம். வெற்றியாளர்கள் ஆசிய மன்றத்தினால் தெரிவுசெய்யப்படுவார்கள் உங்கள் புகைப்படங்களை சமர்பிப்பதற்கான கடைசித் திகதி: ஆகஸ்ட் 31,2020 எங்களுடைய தற்போதைய செயட்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் முகப்புத்தகத்தை பின்தொடர மறந்துவிடாதீர்கள்.!!