img_container
29 Aug

சமூக ஊடகம் மூலமாகக் கதைசொல்லுதல்

Venue : Zoom
Date : 08/29/2020
Time : 07:45 PM

டிஜிட்டல் ஸ்டோரிடெல்லிங் (Digital Storytelling) ஸ்தாபகரும் மற்றும் டெய்லி மிரர் பத்திரிகையில் ஓர் இதழாளருமான பெனிஸ்லொஸ் துஷான், கொவிட் – 19 கால கட்டத்தில் சமூக ஊடகங்களைப் பாவிப்பதிலான தாக்கங்கள் தொடர்பாக இளைஞர்களுடன் பேசுவதற்காக ‘வல்யூஸ்போர் ஆல்’ (Values4All) எனும் இணையக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார். கலந்துரையாடல் ஆகஸ்ட் 29, 2020 அன்று சூம் (Zoom) இணையச் செயலி ஊடாக “கொவிட் – 19 காலகட்டத்தில் இளைஞர்களும் தகவல் தொழில்நுட்பமும்” தொடர்பான இணையக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக இடம் பெற்றது. இதன் போது, கதைசொல்லுதல் அல்லது தகவல் விபரித்தல் எனப்படும் ஸ்டோரிடெல்லிங் இன் நன்மைகள் பற்றிப் பேசிய பெனிஸ்லொஸ் இளம் ஆட்கள் சமூக ஊடகங்களில் அவர்களது இடைத்தொடர்பாடல்ளை மேம்படுத்தக் கூடிய வழிமுறைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். உலகிலுள்ள ஏனையவர்களுடன் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பயனுள்ள தளமாக, ஸ்டோரிடெல்லிங் என்பதன் எண்ணக்கரு பற்றி முதலில் அவர் விபரித்தார். அவரைப் பொறுத்த வரை சொல்பவரிடமிருந்து கேட்பவருக்கு எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் தகவல்ளைத் தெரிவிக்கும் ஒரு பொறிமுறையை இது காண்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனுமே ஒரு கதை சொல்பவன் எனும் கருத்து இதன் பின்னே உள்ளது. திரைப்படமொன்றிற்கு ஒருவரின் விமர்சனத்தைப் பகிர்தல், உணர்வுகளைப் பகிர்தல் அல்லது யோசனையொனறைத் தெரிவித்தல் என்பவை கதைசொல்லுதலின் வடிவங்களே என பெனிஸ்லொஸ் சில பொதுவான உதாரணங்ளைப் பகிர்ந்து கொண்டார். ஒரு கதையைப் பகிர்ந்து கொள்வதற்கு புகைப்படங்கள், கவிதைகள், காணொலிகள், கேலிச் சித்திரங்கள் போன்ற பலதரப்பட்ட வழிவகைகள் மட்டுமன்றி தற்போது போண்மிகள் (memes), சமூக ஊடகங்கள் என்பவையும் கூட, இன்று கதை சொல்வதற்கான மிகவும் பயனுள்ள சாதனமாக வந்துள்ளன. தகவல் பரிமாற்றத்தின் மக்கள் மயப்படுத்தல் பற்றிக் குறிப்பிடுகையில் - தகவல்கள் இனியும் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களால் மாத்திரமின்றி, எவரினாலும் வெளியிடப்படுகின்றதையும் – அதற்கான நன்றிகள் இணையத்திற்கு உரித்தானவை எனவும், கதைசொல்லுதல் பரிணாமம் அடைந்துள்ளது எனவும் பெனிஸ்லொஸ் கூறினார். ஒரு கதைசொல்பவர் வழமையில் ஓர் எளிய, தகவல் பற்றிய ஈடுபாடற்ற உரைசொல்பவராகவே இருந்துள்ளார். ஆனால் இன்று அவர்கள் தகவல் குறித்து மிகுந்த ஈடுபாட்டுடன் ஒரு கூடுதல் பலமான வகிபாகத்தைக் கொண்டுள்ளதுடன் அங்கு கதையில் பங்குபற்றும் ஒருவராகவும் கூட இடைவினையாற்றுகின்றனர். மேலும், இணையப் புரட்சியையும், மற்றும் கதைசொல்லுதலை முன்னெடுத்துச் செல்வதில் திறன்பேசிகள் (smart phones) மற்றும் சமூக ஊடகங்களின் புரட்சி என்பன அநேகம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர்கள் வருடாந்தம் 9.2% அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டும் ஹூட் சூட் (Hootsuite) சமூக ஊடக முகாமைத்துவ தளத்தினால் 2020 இல் நடத்தப்பட்ட ஒரு மதிப்பாய்விலிருந்து கண்டறிதல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட கூற்றிணையும் அவர் ஆதரித்தார். தகவல் பரிமாற்றத்தின் மக்கள் மயப்படுத்லைக் காண்பிப்பதற்கு பெனிஸ்லொஸ் வழமையான ஊடகத்துடன் வெகுஜன ஊடகத்தையும் ஒப்பிட்டார். ஆரம்பத்திலிருந்தே, பிரதான ஊடக வகை பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பவற்றால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததின் காரணமாக சாதாரண பிரஜை எவரும் செய்திகளை அதில் இலகுவாகப் பிரசுரிக்கவோ அல்லது பகிர்ந்து கொள்வதற்கு முடியாது. ஆனால், ‘புதிய ஊடகம்’ எனவும் அறியப்படும், வெகுஜன ஊடகத்துடன் எவரும் இப்பொழுது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முடியும். இந்தத் தகவல்கள் கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் மற்றும் பொருத்தமானதும், உணமையானதும் என சாதாரண பிரஜை ஒருவர் கருதும் புகைப்படங்களாகவும் இருக்க முடியும். இதன் மூலம், இந்த ஊடகத்தின் ஜனநாயகத் தன்மையான பன்மைத்துவத்தை, இது நிரூபிக்கின்றது. வழமையான பாரம்பரிய ஊடகமென வரும்பொழுது, ஒரு நிகழ்வினை படமாக எடுப்பதற்கு அல்லது புகைப்படம் பிடிப்பதற்கு நாங்கள் நிகழ்வு இடம்பெறுமிடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் இந்த வெகுஜன ஊடகத்தில், நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் தருணங்களையும் உடனடியாகவே நாங்கள் பகிர்ந்த் கொள்வதற்கு முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டார். பாரம்பரிய ஊடகம் வெளியே இருந்து உள்நோக்கிப் பார்த்தது எனவும் வெகுஜன ஊடகத்தில் கதைசொல்பவர் உள்ளிருந்து கொண்டு ஒரு திறன்பேசியை உயோகித்து பகிர்ந்து கொள்ளப்படுகின்ற செய்திக்கான (தொகுத்தல் மற்றும் வெளியிடுதல் உட்பட) பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டுமென பெனிஸ்லொஸ் வலியுறுத்தினார். இந்த இரண்டு ஊடகங்களுமே கதைசொல்தலுக்கு அத்தியாவசியமாவை எனக் குறிப்பிட்ட பெனிஸ்லொஸ், இளம் ஆட்களுக்கு கதைசொல்தலுக்கு சமூக ஊடகம் ஒரு முக்கியமான வாகனம் என்பதை எங்களுக்கு நினைவுபடுத்தி தனது கலந்துரையாடலை நிறைவு செய்தார்.