img_container
17 Mar

இலங்கையில் நல்லிணக்கத்திற்கான ஒரு பாதை

Venue : Sri Lanka
Date : 03/17/2021
Time : 09:00 AM

ஆக்கம் செலினா கிராமர் இலங்கையின் 30 வருட கால கசப்பான உள்நாட்டு யுத்தம், இன ரீதியாகப் பன்முகப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்தர்கள், தமிழ் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் மீது துன்பம், இழப்பு, மற்றும் மத ரீதியான பதட்டம் என்பவற்றின் நிழல்களைத் தொடர்ந்தும் படியவிட்டு வருகிறது. மோதலிற்குப் பிந்திய காலகட்டத்தில் பயணிப்பதற்கு நாடு முயன்று வருகையில், பொது வாழ்க்கையில் உள்ளிணைத்தல் மற்றும் சமூக ஒத்திசைவு என்பவற்றை மீள்நிலைநாட்டுவதை விட கூடுதல் அவசரம் கொண்ட பணி இங்கு வேறு எதுவுமில்லை. இந்தச் சவாலை எதிர்கொள்வதில் பாடசாலைகள் ஒரு முக்கியத்துவம் கொண்டவை என்பதுடன், சமூகங்களிற்கிடையிலான மோதல் மற்றும் வன்முறை என்பவை மீளவும் நிகழாதிருப்பதற்கு கூடுதல் சகிப்புத்தன்மையை வளர்த்தல் மற்றும் உறுதிப்படுத்துதல் என்பவற்றுக்கு கல்வி முறைமையை மறுசீரமைப்பது முன்னைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களிற்கான ஓர் ஆணையாக இருக்கின்றது. . 2008 இல் குடியியல் கல்வி தொடர்பான வகுப்பறைப் பாடங்களின் ஓர் அறிமுகம் நம்பிக்கை அளிப்பதாக காணப்பட்டது, ஆனாலும் அது சமூகங்களிற் கிடையிலான உறவுகளில் அர்த்தபூர்வமான முன்னேற்றம், எதனையும் ஏற்படுத்தவில்லை, மற்றும் விழுமியக் கல்வி என்பது மத ரீதியான பிணைப்புகள் சம்பந்தப்பட்ட ஆன்மீக நன்னிலை சார்ந்த ஒரு விடயமாக பொதுவாகக் கருதப்பட்டது. ஒரு விழுமிய அடிப்படையிலான அணுகுமுறையின் இல்லாமையும், மற்றும் அதில் ஈடுபடுவதற்கு மதச் சார்பற்ற ஓர் இடத்திற்கான தேவையும், இலங்கையில் விழுமியங்களின் பகிர்ந்துகொள்தலை முன்னேற்று வதற்கு, நாட்டில் சமூகங்களுக்கிடையில் உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ‘த ஏஷியா பவுண்டேஷனை’ (The Asia Foundation) ஊக்குவித்தது. செயல்திட்டம் களுத்துறை, குருநாகல், அம்பாறை, திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்கள், மற்றும் அவ்வாறே சமூக ஊடகம் வாயிலாக கூடுதலான பரந்தளவில் இளைஞர் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர்களுக்கு விழுமியக் கல்வி தொடர்பான அதன் சொந்த நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விழுமியக் கல்வித்திட்டம் பவுண்டேஷனால் 2012 இல் உருவாக்கப் பட்டதுடன், அது ஓர் அன்ரோயிட் அலைபேசிச் செயலியாகவும் (Android mobile application) மற்றும் அதன் சொந்த இணையத்தளம் மூலமாகவும் கிடைக்கின்றது. மற்றைய சமூகங்களுடனும் மற்றும் தங்களது சொந்தச் சமூகத்தினுள்ளும் எழுகின்ற சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் என்பவற்றுக்கு பன்மைத்துவமும் சகிப்புத்தன்மையும் கொண்ட ஓர் அணுகுமுறையை ஆதரிக்கின்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் விழுமியங்களை வளர்ப்பதற்கு அது முனைகிறது. இவை ஆர்வத் துடனான செவிமடுத்தல், சமாதானம், மதிப்பளித்தல், சகிப்புத்தன்மை, இரக்கம், நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் ஒத்துழைத்தல் போன்ற முக்கியமான மனித மாண்புகளை உள்ளடக்குகிறது. செயல்திட்டத்தினால் நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான ஆய்வுகள் விழுமியங்கள் அடிப்டையிலான கல்வியின் ஸ்தாபிக்கப்படுதலுக்கான தேவையை வலியுறுத்துகின்றதுடன், அவை இம்முயற்சியை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் சில சுவாரசியமான விளங்கிக்கொள்தல்ளை அளிக்கின்றன. அதிலொன்று, கடந்த வருடம் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்பட்ட ஓர் ஆய்வு சமூகங்களிற்கிடையிலான, இன – மத உறவுகள் தொடர்பாக இளைஞர் கண்ணோட்டங்களின் 2018 ஆராய்ச்சியின் ஒரு பிற்தொடர்ச்சியாகும். கடந்த வருடம் மே மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரையான, இரண்டாவது ஆய்வு, பங்குபற்றும் இளைஞர் மீது விழுமியக் கல்வித்திட்ட பயிற்சியின் தாக்கம் பற்றிய ஒரு பண்புசார் மதிப்பீடாகும். பிற்தொடர்ச்சி ஆய்வுகளிலிருந்தான கண்டறிதல்கள், சமாதானம் மற்றும் நாட்டிலுள்ள இன மற்றும் மத ரீதியான குழுக்கள் என்பவை தொடர்பான கண்ணோட்டங்களில் 2018 இலிருந்து சில நம்பிக்கையளிக்கும் போக்குகளையும் மற்றும் எவ்வாறு இளைஞர் கண்ணோட்டங்கள் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகம் என்பவற்றினாலும், அவர்களின் செயற்பாட்டு மட்டத்தினாலும், மற்றும் அவர்கள் வாழும் சமூகங்களினால் தொடர்ச்சியாக வடிவமைக்கப்படுகின்றன என்பதையும் உள்ளடக்கின. சமாதானக் கல்வி பாடசாலைப் பாட விதானத்தில் உட்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென பதிலிறுத்தவர்களுள் ஏறத்தாழ அனைவரும் (94 சதவீதம்), தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2018 மற்றும் 2020 இல் பதிலிறுத்தவர்களும் அவ்வாறே, நேர்மை (72 சதவீதம்), சமாதானம் (68 சதவீதம்), மற்றும் மதிப்பளித்தல் (64 சதவீதம்) என்பவற்றை சிறுவர்களில் வளர்க்க வேண்டிய மிக முக்கியமான மாண்புகளாக இனங் கண்டனர், திறந்த மனதுத்தன்மை மற்றும் சகவாழ்வு என்பவற்றைக் குறிப்பிடும் விகிதமும் அதிகரித்தது. ஆய்வில் பங்குபற்றிய இளம் ஆட்களில் எண்பத்தியைந்து சதவீதமானவர்கள் பன்மைத்துவ இன மற்றும் மதப் பின்னணியிலிருந்தான சிறுவர்கள் பாடசாலையில் இடைத்தொடர்பாடுவதற்கு வாய்ப்புகளைக் கொண்டிருந்தனர் என உணர்ந்தனர். அவர்களுள், 70 சதவீதமானவர்கள் அதனை வகுப்பறையெனக் குறிப்பிட்டனர், 40 சதவீதமானவர்கள் விளையாட்டு நடவடிக்கைகளென்றும், மற்றும் ஏனையவர்கள் இவ்விடைத்தொடர்பாடல்கள் நடைபெறும் இடங்களாக கல்விசாரா நடவடிக்கைகள், மன்றங்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றைக் குறிப்பிட்டனர். எனினும், விசேடமாக ஒருவரின் மதத்தை முன்னிறுத்திப் பாதுகாக்கும் பொழுது, வாய் வார்த்தை மூலமான தாக்குதல் (53 சதவீதம்) மற்றும் உடல்ரீதியான வன்முறை (51 சதவீதம்) பிரயோகங்களின் ஒரு கணிசமான மட்டத்து ஏற்றுக்கொள்ளுதலையும் கூட ஆய்வு பதிவு செய்தது. இளைஞர் செயலீடுபாடு நாடு முழுவதிலுமாக அதிகரிக்கும் ஆர்வத்தை ஈர்க்கின்றதுடன் இன-மத வேறுபாடு கொண்ட சமூகங்களிற்கிடையில் கூடுதல் இடைத்தொடர்பாடலுக்கான ஒரு மார்க்கமாகக் கருதப்படுகிறது. மற்றைய இன-மதப் பின்னணிகளிருந்தான மக்கள் தொடர்பான தங்களது பார்வைகளை இளைஞர் மன்றங்கள் மற்றும் சங்கங்கள் பெரிதும் முன்னேற்றின என 2018 இல் எண்பத்தொரு சதவீதத்தினரும் 2020 இல் 78 சதவீதத்தினரும் தெரிவித்தனர். முக்கியமான செல்வாக்குக் காரணிகளாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான கண்ணோட்டங்களில் மாற்றம் இல்லாதிருந்த வேளையில், 2018 மற்றும் 2020 இற்கிடையில் மதத் தலைவர்களாலான செல்வாக்கு ஊடக செல்வாக்கினை மேவிச் சென்றது சுவாரசியத்திற்குரியதாக இருந்தது. உள்நாட்டுத் தொலைக்காட்சியின் செல்வாக்கு இணையத்தள பாவனைக்குச் சமாந்தரமாக அதிகரித்ததுடன், சமூக ஊடகம் தொடரலையில் (online) குரோதப் பேச்சு அதிகரிப்புக்கு பங்களிப்பதாகக் கருதப்பட்டது. இளைஞர்கள் கூடுதல் பொறுப்புக் கொண்டவர்களாகவும் அவர்களின் சமூக ஊடகப் பாவனை குறித்து கவனம் கொண்டவர்களாக இருப்பதையும் கூட ஆய்வு காணபித்தது. பதிலிறுத்தவர்களுள் எழுபத்தி மூன்று சதவீதமானவர்கள் ஏனையவர்களின் சமயங்கள் மற்றும் இனத்துவங்கள் குறித்த விரோத கூற்றுகளை சமூக ஊடகங்களில் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன் இணங்கினர், மற்றும் 68 சதவீதமானவர்கள் அவ்வாறான இடுகைகள் நம்பகத்தன்மை இல்லாதவையெனத் தெரிவித்தனர். எனினும், 2020 இல் பதிலிறுத்தவர்களில் கூடுதலானோர், அவர்களது மத மற்றும் இனப் பின்னணிகள் காரணமாக 2018 இலான அடிப்படை மதிப்பாய்வை விட தொடரலையில் விரோத பதிலிறுப்புகளை (27 சதவீதம்), இணையவழி வன்முறை (17 சதவீதம்) மற்றும் குரோதப் பேச்சு (31 சதவீதம்) என்பவற்றை அனுபவித்தனர். பண்புசார் மதிப்பீடு, 90 பேர்கள் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர் அனுசரனையாளர்களும் எஞ்சியவர்களாக ஒரு நாள் பங்குபற்றுனர்களையும் கொண்ட, 165 பங்குபற்றுனர்களுடன் ஒரு தொடரான குழுநிலைக் கவனக் கலந்ததுரையாடல்களை அடிப்படையாகக் கொண்டது. நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பம், ஆகஸ்ட் 2019 இலிருந்து மே 2020 வரை, இளைஞர் மத்தியில் விழுமியங்களின் பகிர்தலிற்கு எப்படியாகப் பங்களித்தது என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தக் கலந்துரையாடல்கள் முனைந்தது. மற்றைய இன-மத சமூகங்களில் இருந்தான சகநிலையிலுள்ளவர்கள் நோக்கியதான உளப் பாங்குகள் மற்றும் நடத்தை என்பவற்றிலான முன்னேற்றம் ஒரு முக்கிய குறிக்காட்டியாகும். கடந்த வருடங்களில் அனுசரனையாளர்களின் அனுபவங்கள், குறிப்பாக சகநிலையிலுள்ளவர்கள் மத்தியில் முரண் பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கான அவர்களின் இயலுமையை முன்னேற்றுதல் மற்றும் மற்றைய சமூகங்களுக்கான அவர்களின் பச்சாத்தாபத்தை அதிகரித்தல் என்பவை மூலம் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் கணிசமானளவில் தாக்கத்தை ஏற்படுத்தின என இந்த மதிப்பீட்டின் மூலமாகச் சேகரிக்கப்பட்ட சம்பவக் கற்கைகள் காண்பிக்கின்றன. எனினும், தங்களது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சகநிலையிலுள்ளோர்கள் மற்றும் குடும்பத்தவர்களுடன் மேம்பட்ட உறவு போன்ற ஒத்த அனுபவங்களை செயல்திட்டத்தின் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்கள் பகிர்ந்து கொண்ட வேளையில், செயல்திட்டத்திற்கு அவர்களது மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்படுத்தல் காரணமாக, நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து முக்கியமான நீண்டகால நன்மை எதனையும் அவர்களால் அடையாளம் காண்பதற்கு முடியவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தின் பின்னர், தேசிய நல்லிணக்கத்தின் விடயங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டிய ஒரு திருப்புமுனையில் இலங்கை உள்ளது. நாட்டின் சமூக சகவாழ்வைப் புதுப்பிப்பதற்கான தற்போதைய முயற்சிகள் பாராட்டத்தக்கவை, ஆனாலும் அவை ஒரு மறுசீரமைக்கப்பட்ட கல்வி முறைமையிலிருந்து அடிப்படை ரீதியான ஆதரவற்றுள்ளது. இந்தக் கண்டறிதல்கள், விழுமியக் கல்வித் திட்டமொன்றின் அடிப்படையிலான, விழுமியக் கல்வி, இலங்கையில் கூடுதல் சகிப்புத்தன்மை, உள்ளிணைக்கின்ற, மற்றும் ஒத்திசைவான சமுதாய மொன்றுக்கான படிக் கற்களில் ஒன்றாக முடியுமென்பதைக் காண்பிக்கின்றன.