img_container
01 Jan

அனைவருக்கும் விழுமியங்கள் (Values4All) – மாவட்ட மட்ட பயிற்சிகள்

Venue : Sri Lanka
Date : 30/12/2018
Time : 11:15 AM

தேசிய இளைஞர் சேவைகள் பேரவை மற்றும் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆசிய மன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்ட Values4All நிகழ்ச்சியின் கீழ் மாவட்ட மட்ட பயிற்சி தொடர்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. களுத்துறை, திருகோணமலை, குருநாகல், அம்பாறை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 2018ஆம் ஆண்டு செப்ரம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் பேரவை, ஸ்ரீலங்கா யுனைட்ஸ், சர்வவோதயம் மற்றும் ரோடரெக்ட் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த இளம் பயிற்றுனர்கள் மற்றும் பங்குப்பற்றுனர்கள் இந்த பயிற்சித் தொடர்களில் கலந்து கொன்டனர். மாவட்ட மட்ட பயிற்சிகளுக்கு முன்னர் ஆசிய நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, ஆலோசனையளிக்கப்பட்ட விழுமியங்களில் பயிற்சி பெற்ற இளம் பயிற்சியாளர்களால் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஊடாடும் நடவடிக்கைகளின் தொடர்ச்சி ஊடாக பின்வரும் மனிதநேய விழுமியங்கள் குறித்து கற்பிக்கப்பட்டன: செயற்றிறன் மிக்க செவிமடுத்தல், சமாதானம், மதிப்பும், இரக்கம், சகிப்பு தன்மை, நேHமை மற்றும் உண்மைத்தன்மை, ஒன்றாக வேலை செய்தல் மற்றும் கூட்டுவேலை. இந்த நிகழ்வில், அன்ரோய்ட்டின் கூகுள் பிளேஸ்டோரில் விரைவில் கிடைக்கப் போகின்ற விழுமியங்கள் பாடவிதானத்தின் டிஜிட்டல் பதிப்பானது பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்து வரும் வருடத்தில், மேற்குறிப்பிட்ட மாவட்டத்தில் பல்வேறு இளைஞர் நிறுவனங்களால் பாடவிதானம் கற்பிக்கப்படும்.