img_container
02 Jan

e-தக்சலாவ மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கப் பெறும் Values4All

Venue : Sri Lanka
Date : 01/02/2019
Time : 11:30 AM

தற்போது இணையத்தில் Values4Allஇனை பதிவிறக்கம் செய்ய முடியயும். விழுமியங்கள் கல்வி நிபுணரின் ஆதரவுடன், மற்றும் இளைஞர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் ஆகியோருடனான ஆலோசனையின் கீழ் ஆசிய மன்றத்தினால் தயாரிக்கப்பட்ட விழுமியங்கள் பாடவிதானத்தின் அடிப்படையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவான ஆறு விழுமியங்களை இந்த பாடவிதானத்தில் உள்ளடக்கியுள்ளது. அவையாவன: செயற்றிறன் மிக்க செவிமடுத்தல், சமாதானம், மதிப்பு, சகிப்புத் தன்மை, இரக்கம், நேர்மை மற்றும் உண்மைத் தன்மை, ஒன்றாக வேலை செய்தல். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கப் பெறும் Values4Allஆனது, அனைத்து இளைஞர்களினதும் விழுமியங்களினதும் உள்ளடக்கமான புரிந்துணர்வை உறுதி செய்வதற்கு பயிற்சி வழிகாட்டி மற்றும் விவரணம், சைகை மொழியுடன் காணொளிகளை உள்ளடக்கியுள்ளது. பின்வரும் தளங்களின் ஊடாக செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்: - கூகுள் பிளே ஸ்டோர் (Google Play store) https://play.google.com/store/apps/details?id=com.values4all.valuescurriculum.androidproject -இ-தக்சலாவ (e-thaksalawa) – கல்வி அமைச்சினால் நடத்தப்படும் தேசிய இணைய கற்றல் தளம் http://www.e-thaksalawa.moe.gov.lk/web/en/updates/item/582-values4all.html - அல்லது QR குறியீடு ஊடாக. சாதகமான விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதில் ஆர்வங் கொண்ட எவரும் பயன்படுத்தக் கூடிய ஊடாடும் நடவடிக்கைகளை பாடவிதானம் முன்னிறுத்துகின்றது. இளைஞர் கழகங்கள் மத்தியில் இளைஞர் குழுக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். பாடசாலைகள் போன்ற ஏனைய சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கும் அது ஏதுவானதாக இருக்கின்றது. பங்குபற்றுனHகளின் உள்ளூர் சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த ஆவணத்தை உள்வாங்கிக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் அல்லது வேறுபட்ட வயது குழுக்களுக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.