img_container
03 Jan

“கற்றல், பகிரல் மற்றும் பின்னோக்கிப் பார்த்தல்” அனைவருக்கும் விழுமியங்கள் கூட்டுச் செயலமர்வு- குருநாகல் 2019.

Venue : Thulhiriya - Kurunegala
Date : 01/03/2019
Time : 08:00 AM

தேசிய இளைஞர் சேவைகள் பேரவை (NYSC), சர்வோதயம் மற்றும் ரோட்டரி ஆகியவற்றிலிருந்து அனைவருக்கும் விழுமியங்கள் இளைஞர் பயிற்றுனர்கள் குருநாகல் MAS Athenaஇல் 2019, பெப்ரவரி மாதம் 26 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெற்ற கூட்டுச் செயலமர்வில் கலந்து கொண்டனர். களுத்துறை, குருநாகல், திருகோணமலை, அம்பாறை, வவுனியா, மற்றும் மன்னாரிலிருந்து அணிதிரண்ட பயிற்றுனர்களுக்கு, சக பயிற்றுனர்களை சந்திப்பதற்கும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஒவ்வொருவருடைய சவால்களில் இருந்து கற்றுக் கொள்வதற்கும், 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற முதலாவது செயலமர்வில் இருந்து பார்க்கும் பயணித்த தூரத்தை கண்டறிவதற்குமான மிகப் பொருத்தமான சந்தர்ப்பமாக இந்த செயலமர்வு அமைந்திருந்தது. செயலமர்வின் முதலாவதுநாளில் நடைபெற்ற கூட்டு நிகழ்வில் ஆசிய மன்றம், கல்வி அமைச்சு மற்றும் ஶ்ரீலங்கா யுனைட்ஸ் ஆகியவற்றினைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சின் நெனச இ-தக்சலாவ பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் Ms. சுமுது வாசனா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதன் போது, தகவல் எழுத்தறிவு மற்றும் விழுமியங்களை கற்றலின் விசேடத் தாக்கம் என்பவற்றை அவர் சுட்டிக்காட்டினார். விழுமியங்கள் பாடவிதானத்தின் அடிப்படையில் உள்ளடக்கமான பயிற்சி நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த செயலமர்வு அமைந்திருந்தது. விழுமியங்கள் தொடர்பான எண்ணக்கரு, அகிம்சை வழி தொடர்பாடல், முரண்பாடு அதிகரித்தல் மற்றும் முகாமைத்துவம், சகவாழ்வினைப் புரிந்து கொள்ளல், மற்றும் கதை சொல்லல் ஊடாக நினைவு கூறலை புரிந்துகொள்ளல் போன்ற பல்வேறு தலைப்புகள் தொடர்பில் பிரதிபலிக்கும் அமர்வுகளும் இதில் உள்ளடங்கியிருந்தன. ONURஇனால் தயாரிக்கப்பட்டு இலங்கையின் விருது வென்ற மூன்று இயக்குனர்களான அசோக்க ஹந்தகம, பிரசன்ன விதானகே மற்றும் விமுக்தி ஜயசுந்தர ஆகியோரினால் இயக்கப்பட்ட ‘Him, Her, The Other’ என்ற திரைப்படத்தைப் பார்க்கும் அரிய வாய்ப்பும் இளம் பயிற்றுனர்களுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திரைப்படம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. உங்கள் விழுமியங்களை படம் பிடியுங்கள் போட்டியில் வெற்றிப் பெற்ற உள்ள இளைஞர் புகைப்படக் கலைஞரான Ms. சுயோதமி யோகநாதன் அவர்களையும் ஆசிய மன்றம் அழைத்திருந்தது. விழுமியங்கள் பாடவிதானத்தில் கற்பிக்கப்படும் ஏழு விழுமியங்களில் ஏதாவது ஒன்றை பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு புகைப்படம் எடுக்கு்ம வாய்ப்பினை வழங்கி இந்த போட்டிய ஆசிய மன்றம் ஒழுங்கு செய்திருந்தது. இலங்கையின் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து, ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் போட்டிக்கு Camera.LK அனுசரணை வழங்கியிருந்தது. இலங்கை புகைப்படக் கலைஞர் சங்கத்தின் பதக்கமும், Camera.LKஇனால் ரூ. 50,000.00 பெறுமதியான வவுச்சர் ஒன்றும் சுயோதமி யோகநாதனுக்கு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் விழுமியங்கள் பயிற்சியாளர்களாக தமது அனுபவங்களைப் பகிர்வதற்கும், இளம் பயிற்றுனர்களை சந்திப்பதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இந்த செயலமர்வு வெற்றி கண்டது. அவர்களது பயணம் இப்போதே ஆரம்பிக்கின்றது. இந்த பயிற்றுனர்களால் விழுமியங்கள் பாடவிதானம் கற்பிக்கப்படவுள்ளது. இந்த ஆறு மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் சுமார் 75 இளைஞர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும்.