img_container
09 Jan

விழுமியங்களை கற்பதற்கும், பகிர்வதற்கும் கிடைக்கும் தளம் -விழுமியங்கள் பாடவிதானம் குறித்த மாவட்ட மட்ட பயிற்சிகள்

Venue : Sri Lanka
Date : 01/09/2019
Time : 09:15 AM

மிகவும் காத்திருந்த மாவட்ட மட்ட விழுமியங்கள் பாடவிதான கற்றல் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது (ஆகஸ்ட் 26 - ஒக்டோபர் 5). கற்பதற்கும், தமக்கு நெருக்கமான விழுமியங்களைப் பகிர்வதற்கும் பெரும் ஆர்வத்துடன் இளைஞர்களும் (18 முதல் 29 வயதுக்குள்), செயற்பாட்டாளர்களும் பயிற்சியில் கலந்து கொண்டமையை நாம் கண்டோம். சர்வோதயம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் பேரவையின் ஆதரவுடன், ஒவ்வொரு செயற்றிட்டப் பகுதியிலும் (களுத்துறை, வவுனியா, மன்னார், திருகோணமலை, குருநாகல் மற்றும் அம்பாறை) பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆரம்ப செயலமர்வுகள் ஐந்து நாட்களுக்கு நடைபெற்றன. இளம் பயிற்சியாளர்களுக்கு புதியவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு முதல் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அடுத்த மூன்று நாட்களில், ஒரு நாள் விழுமியங்கள் பாடவிதான செயலமர்வுகள் பயிற்றப்பட்ட இளைஞர் பயிற்சியாளர்களால் 25 பேர் கொண்ட இளைஞர் பங்குபற்றுனர்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டன. திரு. ரம்சி சைனுதீன் மற்றும் Ms. தெவுனி கொடிகல ஆகிய ஆலோசர்களினால் தொடர்ச்சியான வழிகாட்டலையும், ஆதரவையும் பயிற்சியாளர்கள் பெற்றனர். பயிற்சியில் இணைந்து கொண்ட 450இற்கும் மேற்பட்ட இளைஞர் பங்குபற்றுனர்கள் சர்வோதயம், தேசிய இளைஞர் சேவைகள் பேரவை, ரோட்டரி கழகம், களுத்துறை இளைஞர் மன்றம், பிரிட்ஜிங் லங்கா அமைப்பு (மன்னார்), யங் ஸ்டார் இளைஞர் அமைப்பு கிண்ணியா (திருகோணமலை(, பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் (திருகோணமலை), ஹோப்ஃபுல் வொலன்டியர்ஸ் (அம்பாறை) மற்றும் ஜீனியஸ் (அம்பாறை) உள்ளடங்கலாக பல்வேறு மாவட்ட மட்ட இளைஞர் நிறுவனங்களில் இருந்து வந்திருந்தனர். தமது நாளாந்த வாழ்க்கையில் விழுமியங்களின் முக்கியத்துவத்தை இளைஞர் புரிந்துகொள்வதற்கு உதவுவதற்கு அனுபவங்களைப் பகிரல், பிரதிபலிப்பு அமர்வுகள், மற்றும் அளவளாவல் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த அமர்வுகள் இருந்தன. இந்த அமர்வுகளின் போது இளம் பயிற்சியாளர்கள் மற்றும் பங்குபற்றுனர்களிடம் இருந்து நேர்நிலையான பின்னூட்டங்களை நாம் பெற்றோம். ஒட்டுமொத்தமாக 50 வீதமான பயிற்றுனர்கள் விழுமியங்கள் பாடவிதானம் குறித்த தமது புரிந்துணர்வை மேம்படுத்திக் கொண்டனர். குருநாகல் மாவட்டத்தில் இந்த அளவு குறிப்பிட்டத்தக்க அதிகளவில் 97 வீதமாக இருந்தது. தமது சொந்த வலையமைப்புக்களில் (பாடசாலைகள், கழகங்கள் மற்றும் தொழில்சார் அமைப்புக்களில்) விழுமியங்கள் பாடவிதான பயிற்சியைப் பயன்படுத்துவதற்கு அனைத்து பங்குபற்றுனர்களும் ஆர்வமாக இருந்தனர். திருகோணமலை இளைஞர்களில் (92 வீதம்) இது அதிகமாக காணப்பட்டது. விழுமியங்கள் பாடவிதானத்தின் முதலாவது படிநிலை நிறைவுடன், ஒக்டோபர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள இரண்டாம் படிநிலைக்கு நாம் செல்கின்றோம். விழுமியங்கள் குறித்து கற்பதற்கு ஆர்வங் கொண்ட ஒரு இளைஞராக நீங்கள் இருப்பின், www.values4all.lk இணையம் ஊடாக அல்லது எமது Facebook மற்றும் Twitter பக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள். விழுமியங்கள் பாடவிதானம் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களை அன்ரோயிட்டில் கிடைக்கப் பெறும் Values4all mobile app கைபேசி செயலியை தரவிறக்கி பயன்படுத்த அழைக்கின்றோம்.