img_container
05 Oct

கிழக்கில் அனைவருக்கும் விழுமியங்கள் நிகழ்ச்சிக்கு “ஆசியாவுக்கான நூல்கள்” நிகழ்ச்சியின் ஆதரவு

Date : 10/05/2019
Time : 01:15 PM

நாடளாவிய பாடசாலைகள் மற்றும் பொது நூலகங்களின் வலையமைப்பின் ஊடாக பாடவிதானங்களை விநியோகித்து வரும் ஆசியாவுக்கான நூல்கள் என்ற ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சியிடமிருந்து அனைவருக்கும் விழுமியங்கள் (Values4All) நிகழ்ச்சி தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றது. ஆசிய பிராந்தியத்தில் 20 நாடுகளில் செயற்படுத்தப்படும் ஆசிய மன்றத்தின் நீண்ட கால நிகழ்ச்சியாக ஆசியாவுக்கான நூல்கள் நிகழ்ச்சி காணப்படுகின்றது. அனைத்து கற்றல் மட்டங்களையும், வயதுகளையும் சேர்ந்த வாசகர்களுக்கு உயர்தரமான ஆங்கில மொழி நூல்களையும், சஞ்சிகைகளையும் இந்த நிகழ்ச்சி நன்கொடையாக வழங்கி வருகின்றது. இலங்கையில் உள்நாட்டு மொழிகளில் பதிப்புகளும், பொது பரீட்சைகளுக்கான மாதிரி வினா-விடைத்தாள்களும் இந்த நிகழ்ச்சியினூடாக நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆசியாவுக்கான நூல்கள் ஊடாக ஒவ்வொரு வருடமும் நன்கொடைகளினால் சுமார் ஒன்பது மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர். Values4All நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல், பல்வேறு பொது நூலகங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் பாடசாலைகளுக்கு விழுமியங்கள் தொடர்பான பாடவிதானத்தை நன்கொடையாக வழங்கியதன் மூலம் Books For Asia நிகழ்ச்சி தமது ஆதரவை வழங்கியது. இந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு பாடவிதானத் தொகுதியும் வழங்கப்பட்டது. Books For Asia நிகழ்ச்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விசேட நூல் அன்பளிப்பு நிகழ்வின் போது ஏழு செயற்பாட்டு கையேடுகளுடன் ஒரு பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பாடசாலைக்கும், பொது நூலகத்திற்கும் பாடவிதானத் தொகுதிகள் தனிப்பட்ட அடிப்படையில் வழங்கப்படுவதனை உறுதி செய்தல் மற்றும் Values4All கைபேசி செயலி (Mobile App) மற்றும் அதன் மும்மொழிகளிலுமான இணையத்தளத்தினை முன்னிறுத்துவதில் Books For Asia நிகழ்ச்சியின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு அன்டன் நல்லத்தம்பி அவர்கள் முன்னிலை வகித்தார். மொத்தமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதினொரு அரசாங்க பாடசாலைகளும், ஏழு பொது நூலகங்களும் Values4All பாடவிதானத் தொகுதியினைப் பெற்றன. சம்மாந்துறை, நிந்தவூர், காரைத்தீவு, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனையைச் சேர்ந்த பொது நூலகங்கள் மற்றும் பின்வரும் பாடசாலைகளுக்கும் இந்த நூற்தொகுதி வழங்கப்பட்டன. வெஸ்லி கல்லூரி, கல்முனை அல்மனார் மத்திய கல்லூரி – மருதமுனை, அல்-ஹம்ரா வித்தியாலயம் – மருதமுனை, அல்-மதீனா வித்தியாலயம் – மருதமுனை, நாவலர் வித்தியாலயம் – பாண்டிருப்பு, அல்-ஹிம்ரா கனிஷ்ட பாடசாலை – மருதமுனை, புலவர்மணி மகா வித்தியாலயம் – பெரியநீலாவணை, மற்றும் சரஸ்வதி வித்தியாலயம் – பெரியநீலாவணை. தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வரும் திரு. நல்லத்தம்பி அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். Books For Asia நிகழ்ச்சி குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு விஜயம் செய்யுங்கள்: https://asiafoundation.org/what-we-do/books-for-asia/.