img_container
07 Jan

கொவிட்-19 பெருந்தொற்றின் போது பகிரப்பட்ட விழுமியங்கள் ஏன் முக்கியமானதாகின்றது?

Date : 01/07/2020
Time : 08:15 PM

விழுமியங்கள் பாடவிதானத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாவட்ட மட்ட அமர்வுகளின் இரண்டாவது படிநிலையானது, களுத்துறை, குருநாகல், திருகோணமலை, அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 2019 டிசம்பரில் வெற்றிகரமாக நிறைவுப் பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக “புதிய” இயல்பு என்ற சூழ்நிலைக்குள் நாம் பிரவேசிக்கின்ற நிலையில், எமது வாழ்க்கையில் பகிரப்பட்ட விழுமியங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு எமது புதிய அமர்வுகளை திரும்பிப் பார்க்கின்றோம். சர்வோதயம் மற்றும் இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் பேரவையினால் இணைந்து அனுசரணையளிக்கப்பட்ட இந்த அமர்வுகளில், 18-29 வயதுக்குட்பட்ட சுமார் 450 இளைஞர் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இளைஞர் சேவைகள் பேரவை, சர்வோதயம், ரோட்டரி கழகம், களுத்துறை இளைஞர் மன்றம், பிரிட்ஜிங் லங்கா நிறுவனம் (மன்னார்), கெடட்டிங் (குருநாகல்), மற்றும் ஹோப்ஃபுல் வொலன்டியர்ஸ் (அம்பாறை) போன்ற பல்வேறு பிராந்திய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றியிருந்தனர். NYSC மற்றும் சர்வோதயத்தைச் சேர்ந்த இளைஞர் வளவாளர்களைக் கொண்ட பிரதான குழுவினால் அமர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மூன்று அமர்வுகளும்இ தமது நாளாந்த வாழ்க்கையில் விழுமியங்களின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் அனுபவப் பகிர்வு, பிரதிபலித்தல் அமர்வு, ஊடாடல் செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தன. அமர்வின் போதும், அதன் பின்னரும், தமது தொழில்சார் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த அமர்வுகள் எத்தனைப் பயனுள்ளது என்பது குறித்த நேர்நிலையான பின்னூட்டங்களை பங்குபற்றுனர்கள் வழங்கினர். அனைவருக்கும் விழுமியங்கள் ஆலோசகர்களான திரு. ரம்ஷி ஸைன்டீன் மற்றும் Ms.. தெவுனி கொட்டிகல ஆகியோரின் தொடர்ச்சியான வழிகாட்டல் மற்றும் ஆதரவைத் தொடர்ந்து, இரண்டாவது படிநிலையின் போது அனைத்து ஏழு விழுமியங்கள் குறித்த அமர்வுகளை வசதியளிப்பதில் மிகவும் சௌகரியமாக உணர்ந்ததாக பெரும்பாலான இளைஞர் வளவாளர்கள் தெரிவித்தனர். சமர்ப்பித்தல், மத்தியஸ்தம் மற்றும் தொடர்பாடல் குறித்த தமது திறன்களை மேம்படுத்துவதற்கான சந்தர்ர்ப்பத்தை வளவாளர்களுக்கு இந்த அமர்வுகள் வழங்கின. மேலும், 2018-2019 காலப்பகுதியில் தமது ஆரம்ப பயிற்சி முதல், தமது கழகங்கள், சம்மேளனங்கள், பாடசாலைகள் மற்றும் தமது தொழில்சார் வாழ்க்கையில் விழுமியங்கள் பாடவிதானத்தை பயன்படுத்துவதாக 80 வீதமான வளவாளர்கள் குறிப்பிட்டனர். தமது நாளாந்த நடவடிக்கைகளில் அதிகளவு வழிகாட்டும் விழுமியங்களாக சகிப்புத்தன்மை, மதிப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை பெரும்பாலானோர் அடையாளப்படுத்தினர். முதல் படிநிலையில் அமர்வுகளில் கலந்து கொண்ட ஆர்வமுள்ள பங்குபற்றுனர்கள் தன்னார்வ அடிப்படையில் வளவாளர்களாகுவதற்கும், பிரதான குழுவில் இணைந்து கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை பெற்றனர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இந்த வருடத்தின் பிற்பகுதியில் அமர்வுகளின் மூன்றாவது மற்றும் நான்காவது படிநிலை இடம்பெறவுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலின் காரணமாக அனைவருக்கும் விழுமியங்கள் அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், எமது டிஜிட்டல் தளங்கள் ஊடாக எமது வளவாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் நாம் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கின்றோம். இந்த பெருந்தொற்று காலப்பகுதியில் இரவு பகல் பாராது உழைக்கும் முன்னணி பணியாளர்களுக்கு தமது நன்றி செய்திகளை பகிர்வதன் மூலம் சமூக ஊடகங்கள் வாயிலாக சக நாட்டு மக்களிற்கான நேர்நிலையான எண்ணங்களைப் பகிர்வதன் மூலம் ஆறு மாவட்டங்களையும் சேர்ந்த எமது வளவாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கியம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை முன்னிறுத்துவது குறித்து தமது கருத்தினை வெளியிட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கலாஹரன் யசோதரன் “இந்த தேசத்தின் இளைஞர் என்ற வகையில், நாம் விழுமிப்புடன் இருக்க வேண்டும். நம்பகமான மூலங்களில் இருந்து செய்திகளையும், தகவல்களையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டும்” எனத் தெரிவித்தார். “இந்த சூழ்நிலையை கடப்பதற்கு நாம் அமைதியாக செயற்பட வேண்டும்” என அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.எச். ஆசிரி தெரிவித்தார். சமூக களங்கம், ஒரு நிலையான சிந்தித்தல் மற்றும் குற்றம் சுமத்தல் போன்றவற்றிற்கு கொவிட்-19 காரணமாகியுள்ள நிலையில், வைரஸ் குறித்த பயத்தினை இல்லாது செய்வதற்கு, பெருந்தொற்று குறித்து பகிரங்கமாக கதைக்கக் கூடிய சமூகச் சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குருநாகலைச் சேர்ந்த ஓசினி அனுத்தரா வலியுறுத்தினார். இந்த தருணத்தில், நம் அனைவரிடமும் உள்ள சிறந்த விழுமியங்களை நினைவு கொள்ள வேண்டியது முக்கியம். நாம் அனைவரும் பெருந்தொற்று குறித்து பகிரங்கமாக கதைக்கக் கூடிய பாதுகாப்பான, உள்ளடக்கமான சூழல் ஒன்றை உருவாக்குவதன் மூலம் மற்றும் நோய் பரவலை தடுப்பதற்கு ஒன்றாக பணியாற்றுவதன் மூலம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டும். ஒத்துழைப்பு, கருணை, பச்சாதாபம் மற்றும் சகிப்புத் தன்மை போன்ற பிரதான மனிதநேய விழுமியங்கள் எமது செயற்பாடுகளின் பிரதான மையமாக இருத்தல் வேண்டும். எமது செயற்பாடுகள், எமது இளம் வளவாளர்களின் கொவிட்-19 பிரதிபலிப்புகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இளைஞராக நீங்கள் இருப்பின், பொதுவான விழுமியங்கள் குறித்த எமது தொடர்ச்சியான உரையாடலுக்கு பங்களிக்க விரும்பின், எமது இணையத்தளத்திற்கு www.values4all.lk விஜயம் செய்து, Facebook மற்றும் Twitter சமூக ஊடகங்கங்களில் எமது உரையாடல்களில் இணைந்து கொள்ளுங்கள். பாடவிதானம் குறித்தும், செயற்பாடுகள் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு உங்களது அன்ரொய்ட் சாதனத்தில் எமது செயலியை values4all mobile app பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும் நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.