img_container
01 Jan

உலகளாவிய பெரும் நோய்த்தொற்றின் போது அனைவருக்கும் விழுமியங்களை கண்டறிந்த இலங்கையின் இளைஞர்கள்

Venue : Colombo, Sri Lanka
Date : 15/07/2020
Time : 01:00 PM

மார்ச் நடுப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை விதித்து இலங்கை விரைவாக முடக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் இணையத்தில் செலவிட அதிகளவு நேரம் கிடைத்தது. கணிக்க முடியாத மற்றும் இணைய கருத்தோட்டத்திற்கு இடையில், இலங்கை இளைஞர்களால் பரவலாக பகிரப்பட்டு வரும் சில பாரபட்சமான உள்ளடக்கங்களைப் பற்றி ஆசிய மன்றத்தின் இலங்கை அலுவலகத்தில் நாங்கள் கவலை கொண்டோம். நேர்மறையான மாற்றத்திற்கான ஒரு சக்தியாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாக இதை நாங்கள் கண்டோம். மேலும் எங்கள் தற்போதைய சமூக மதிப்பீடுகளை எங்கள் தற்போதைய அனைவருக்கும் விழுமியங்கள் திட்டத்தின் மூலமும் அதிகரிக்கத் தொடங்கினோம். பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் உள்ளடங்கிய வரைபடங்கள் மூலம் தொற்றுநோய் தொடர்பான உள்ளடக்கத்தின் வழக்கமான ஓட்டத்தை பதிவிட்டோம். எங்கள் இளம் அனைவருக்கும் விழுமியங்கள் பங்கேற்பாளர்களிடமிருந்து நேர்மறையான கதைகளுக்கு, சமூக விலகியிருத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நெருக்கடியில் ஒற்றுமையை ஊக்குவித்தல். அனைவருக்கும் விழுமியங்கள் இளம் இலங்கையர்களை தங்கள் சமூகங்களில் உள்ள சிக்கல்களுக்கு சகிப்புத்தன்மை மற்றும் பன்மைத்துவ அணுகுமுறையை ஆதரிக்கும் விழுமியங்களுடன் தயார்ப்படுத்துவதற்கு அனைத்துப் பணிகளையும் செய்கின்றன. சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று தேசிய மொழிகளிலும் இப்போது ஆண்ட்ராய்டு கைபேசி செயலியின் மூலம் கிடைக்கும் திட்ட பாடத்திட்டம், ஏழு முக்கிய மனிதநேய விழுமியங்களை மையமாகக் கொண்டுள்ளது: செவிமடுத்தல், நேர்மை மற்றும் உண்மை, அமைதி, மரியாதை, சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு. இலங்கையின் மிகப் பெரிய இரண்டு இளைஞர் அமைப்புகளான சர்வோதயம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் பேரவை ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து, அனைவருக்கும் விழுமியங்கள் களுத்துறை, குருநாகல், அம்பாறை, திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இளைஞர்களுடன் நேரில் பயிலரங்கங்களை நடத்த திட்டமிட்டன. ஆனால் தொற்றுநோய் பரவல் ஒரு மாற்றத்தை கட்டாயப்படுத்தியது. இணைய அணுகுமுறைக்கு மாறி, அனைவருக்கும் விழுமியங்கள் பங்கேற்பாளர்களும் தெற்காசியா பிராந்தியத்திலிருந்து மேம்பட்ட, அசல் கதைகளை உருவாக்கும் மதிப்புமிக்க இணைய ஊடக நிறுவனமான Roar Mediaவுடன் இணைந்து தொடர்ச்சியான காணொளிகளை உருவாக்குவதில் பணியாற்றினர். அத்தியாவசிய சேவை ஊழியர்களின் தியாகங்களை பாராட்ட இளைஞர்களை ஊக்குவிப்பதனையும், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு எதிராக சமூக ஒத்திசைவு மற்றும் பாரபட்சமின்மை செய்தியை தெரிவிப்பதனையும் புதிய அனைவருக்கும் விழுமியங்கள் காணொளிகள் நோக்கமாக கொண்டுள்ளன. தொற்றுநோய் குறித்த அவர்களின் முன்னோக்குகளை ஆராய்ந்து இணைய கலந்துரையாடலுக்கான ஒரு திட்டத்திற்காக அனைவருக்கும் விழுமியங்கள் இளம் வளவாளர்களையும் நாங்கள் அணுகினோம். நான்கு இணைய அமர்வுகள் நாடு முழுவதும் இருந்து பல்வேறு இன-மத பின்னணியுடன் ஆண் மற்றும் பெண் இளைஞர்களை அணி திரட்டியது. முடக்கம் தேவை என்றாலும், தங்கள் கல்வியை சீர்குலைத்துவிட்டதாக பலர் புலம்பினர். மற்றவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்கும், புதிய பொழுது போக்குகளை ஆராய்வதற்கும் கிடைத்த நேரமாக அதனை வரவேற்றனர். பங்கேற்பாளர்கள் தங்கள் மன நலம், பதட்ட உணர்வுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் தொடர்ந்து பணியாற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து நோயைக் குறைத்துவிடுவார்களோ என்ற அச்சம் குறித்து விவாதித்தனர். எதிர்கால கல்விக்கான அவர்களின் பாதை மறைந்துவிடும் என்று பலர் கவலைப்பட்டனர், இருப்பினும் அவர்கள் எண்மிய கல்வியறிவு மற்றும் தகவல் தொழிநுட்ப ஆர்வலர்களின் வளர்ந்து வரும் தேவையை நம்புகிறார்கள். தவறான தகவல்கள், மாறாநிலையற்ற கருத்துகள் மற்றும் இணைய-கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றின் பரவலானது தொற்றுநோய்களின் போது கவனிக்கப்பட வேண்டிய வளர்ந்து வரும் சவாலாக அடையாளம் காணப்பட்டது. இறுதியாக, பங்கேற்பாளர்களால் தொடங்கப்பட்ட இணைய அமர்வகள் பல புதிய எண்மிய திட்டங்களுக்கு வழிகோலின. அவர்கள் தங்கள் சொந்த சமூகங்களில் நேர்மறையான மதிப்புகளை ஊக்குவிக்க ஒருவருக்கொருவர் சவால் விடுத்தனர், அதாவது இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில் அவர்களுக்கு உதவிய ஒரு நம்பிக்கையோ அல்லது ஒரு கொள்கையோ பகிர்ந்து கொள்வது, குறுகிய ஓவியங்களை கற்பனை செய்வது கோவிட் -19 க்குப் பின் வாழ்க்கை, மற்றும் பாதிக்கப்படக்கூடிய அல்லது வேறுபட்ட திறன் கொண்ட சமூகங்களின் தேவைகளை எடுத்துரைக்கும் நேர்காணல்களை நடத்துதல். அனைவருக்கும் விழுமியங்கள் என்பதன் மத்தியில் இந்த இணையப் பரிமாற்றங்கள் அனைத்து இளைஞர் வசதிகளும் வரவிருக்கும் மாதங்களில் சூழ்நிலைகள் உருவாகும்போது சமூக தேவைகளுக்கு இந்த திட்டம் எவ்வாறு பொருந்துகிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது. ஆசிய மன்றம் தொடர்ந்து இளைஞர்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறது மற்றும் அவர்களின் வலையமைப்புகள் மற்றும் அவர்களின் சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.